கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது !

வங்கதேச கிரிக்கெட் ஆல்ரவுண் டர் ஷாகிப் அல் ஹசன் மற்றும் அவரது மனைவி யை இறக்கி விட்டுப் பறந்த ஹெலி காப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங் கியது. 
கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது !
இதில் ஒருவர் பலியானார், 2 பேர் காய மடைந்தனர். அதிர்ஷ்ட வசமாக ஹசனும் அவரது மனைவியும் உயிர் தப்பினர். காக்ஸ் பஜார் நகரில் இந்த சம்பவம் நடந் துள்ளது. 

ஷாகிப் அல் ஹசனும், அவரது மனைவி உம்மி அகமது சிஷிரும் இந்த சம்பவத் தால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். 

தாங்கள் உயிர் தப்பியது மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்று கூறிய அவர்கள், விபத்தில் ஒருவர் உயிரிழந் தது குறித்து வருத்தம் தெரிவித்து ள்ளனர்.

இன்று காலை காக்ஸ் பஜார் நகருக்கு அருகே உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு டாக்காவி லிருந்து தனது மனைவி யுடன் ஹெலிகாப்ட ரில் வந்து இறங்கினார் ஹசன். 
பின்னர் ஹெலிகாப்டர் திரும்பிச் சென்றது. போகும் வழியில் அது விபத்துக் குள்ளானது. அதில் ஒருவர் உயிரிழந் தார். 2 பேர் படுகாய மடைந்தனர்.

இனானி பீச் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. ஷாகிப் அல் ஹசன் இறங்கிய இடத்திலி ருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலை வில் இந்த பீச் உள்ளது.
Tags:
Privacy and cookie settings