அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மூர்கத்தோலிக்க பள்ளியில் உடற்கல்வி (ஜிம்) ஆசிரியையாக பணியாற்றிவந்த மேகன் மொஹானே (24)
என்பவர் அதே பள்ளி மாணவனான 16 வயது சிறுவனுடன் இரவு விடுதி, மதுக்கூடம் ஆகியவற்றில் சகஜமாக சுற்றித் திரிந்ததாக செய்திகள் வெளி யாகின.
கார், வகுப்பறை மற்றும் தனிமையும் வாய்ப்பும் கிடைத்த போதெல்லாம் அந்த சிறுவனை வற்புறுத்தி இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டதாக மேகன் மொஹானே மீது
குற்றம் சாட்டிய பள்ளி நிர்வாகம் கடந்த ஜனவரி மாதம் அவரை ஆசிரியை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்தது. இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த ஆசிரியை ஜாமினில் விடுதலை ஆகியுள்ளார்.
அவர் மீது நியூயார்க் நகர குற்றவியல் நீதி மன்றத்தில் 30 குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப் பட்டால் அவருக்கு குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் படலாம் என சட்ட வல்லுனர்கள் கருது கின்றனர்.

