கண்பார்வை குறைபாடு ஏன்?

ஒருவரை அடையாளம் காட்டுவதற்கு முற்காலத்தில் ‘அந்த கண்ணாடி போட்ட ஆள்’ என்று குறிப்பிடு வார்கள். அப்போது கண்ணாடி அணிந்தவர்கள் அந்த அளவுக்கு குறைவாக இருந்தார்கள். 


இப்போது அப்படி அடையாளம் காட்ட முடியாது. ஏன்என்றால், வீட்டிற்கு ஒருவரோ அல்லது வீட்டில் அனைவருமோ கண்ணாடி அணிந்தவர் களாக காட்சியளிக் கிறார்கள்.

இந்தியாவில் பத்து கோடிக்கு மேற்பட்ட இளம் வயதினருக்கு கிட்டப் பார்வை குறைபாடு இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. 

நகர்ப்புறங்களில் இருப்பவ ர்களைவிட கிராமப் புறங்களில் இருப்பவர் களுக்கு இந்த பாதிப்பு அதிகம். இதனால் அவர்களுடைய படிப்பு, வேலை பாதிக்கப் படுகிறது. அவர்களது வாழ்க்கையும் குறிப்பிட்ட எல்லைக்குள் சுருக்கப்பட்டு விடுகிறது.

சுமார் 2½ கோடி மக்கள் கண்புரை நோயினாலும் (Cataract), கண்பார்வையை குறைக்கும் விழித்திரை நோயினாலும் (Macular Degeneration) கஷ்டப்படு கிறார்கள்.

கண்பார்வை குறைபாடு ஏன் உருவாகிறது?

வாகனங்க ளிலிருந்து வெளிவரும் புகை, தூசு, தொழிற்சாலை களிலிருந்து வெளிவரும் குளோரின் புகை, லேப்டாப், கம்ப்யூட்டர் ஸ்கிரீன் முன்னால் அதிக நேரம் உட்கார்ந்து 


கண்களுக்கு வேலை கொடுப்பது, டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டே இருப்பது, வயது, பரம்பரை, கண்களில் ஏற்படும் குறைபாடுகள், கண்களில் ஏற்படும் பாதிப்புகள் 

போன்றவை எல்லாம் கண்பார்வை குறை பாட்டிற்கான காரணங் களாக இருக்கின்றன. புறஊதாக் கதிர் ஒளி கூட (Ultra violet light) கண்களில் பட்டு லென்ஸ், விழித்திரையை தாக்கி பார்வை குறைபாட்டை உருவாக்குகிறது.

மனிதர்களைப் போலவே கழுகு, புலி, நரி, போலார் கரடி, சிங்கம், குரங்கு போன்றவை களுக்கும் ‘துணை விழிப்பார்வை’ ( Binocular vision ) உண்டு. துணைவிழிப் பார்வை என்றால் இரண்டு கண்களையும் ஒரே நேரத்தில், ஒரே பொருளைப் பார்க்கப் பயன்படுத்து வதாகும். 

நமது கண்கள் பக்கவாட்டில் தனித்தனியாக இருப்பதால், ஒவ்வொரு கண்ணும் சற்று மாறுபட்ட காட்சியை கண்ணில் படம் பிடிக்கும். 

இந்த இரண்டு கண்களின் காட்சிகளும் மூளைக்குச் சென்று, மூளை இந்த இரண்டு காட்சிகளையும் ஒரே காட்சியாக ஆக்கி, அதை 3D வடிவத்தில் நமக்குக் கொடுக்கிறது. இதைத்தான் ‘பைனாக்குலர் விஷன்’ என்று சொல்கிறோம்.

நாம் இப்போதெல்லாம் கண்களுக்கு அதிகமாக வேலை கொடுக்கிறோம். வேலைக்கு தக்கபடி கண்களை சரியாக பராமரிப்ப தில்லை. பார்வை சக்திக்கு ஏற்ற சத்துணவு களை உண்பதில்லை. 

பார்வையை மேம்படுத்தும் பயிற்சி களையும் செய்வதில்லை. தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் போது, தலையை மேலும் கீழும் மெதுவாக ஆட்டிக் கொள்ள வேண்டும்.

அப்படி செய்தால் கழுத்துப் பகுதிக்கும், கண்ணுக்கும் ரத்த ஓட்டம் அதிகமாகக் கிடைக்கும். பார்வை மேம்படும். குறிப்பிட்ட யோகாசனங்கள், உடற்ப யிற்சிகள் மூலமும் பார்வை திறனை மேம்படுத்தலாம்.

கண் பார்வையை மேம்படுத்த அதற்குரிய உணவுகளை சாப்பிட வேண்டும். கேரட், காட் லிவர் மீன் எண்ணெய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வெண்ணெய், பப்பாளிப்பழம், திராட்சைப்ப ழம், அத்திப்பழம் 


முதலியவை களை அவ்வப்போது சாப்பிட்டு வருவது நல்லது. தொடர்ந்து கண்ணுக்கு வேலை கொடுக்காமல், அவ்வப்போது கண்களுக்கு ஓய்வும் கொடுக்க வேண்டும்.

ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடம் என்ற அளவிலாவது அந்த ஓய்வு அமைய வேண்டும். குளிர்ந்த நீரில் அவ்வப்போது முகத்தை கழுவுவதும் நல்லது.

ஆழ்கடலில் வாழும் மீன்களிலும், குறிப்பிட்ட பருப்பு வகைகளிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கிறது. 

அவைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் விழித் திரையின் ஆரோக்கி யத்தை காக்கலாம். வயதான பின்பு வரும் கண் பிரச்சினை களையும் தவிர்க்கலாம்.

பார்வைத் திறன் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இனிப்பு வகை உணவுகளை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். சிகரெட் புகைப்பதை நிறுத்த வேண்டும்.

சிகரெட் பிடிப்பவர் களுக்கு கண்புரையும், கண் நரம்பு பாதிப்பும் விரைவாகவே ஏற்படக்கூடும்.

ஒரே இடத்தில் உட்கார்ந்து, ஒரே பொருளைப் பார்த்து வேலை செய்பவர்கள் அரைமணி நேரத்திற்கு ஒரு முறை, உட்கார்ந்தி ருக்கும் இடத்தி லிருந்து சுமார் 20 அடி தூரத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை 20 வினாடிகள் உற்றுப் பார்க்க வேண்டும். 

பின்பு கண்களை அதிலிருந்து விலக்கி விட்டு வேலையை தொடர வேண்டும். கம்ப்யூட்டர்- லேப்டாப்- செல்போன் ஸ்கிரீன்களில் அதிக வெளிச்சம் வைக்கக் கூடாது.

கண்ணாடி அணிபவர்கள் தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் கண்ணாடி அணிந்தபடியே இருக்க வேண்டிய தில்லை. அவ்வப்போது கண்ணாடியை கழற்றி விட்டு வெறுங்கண் களோடு சிறிது நேரம் பாருங்கள்.

கண்களை குளிர்ந்த நீரில் கழுவி விட்டு, கண்களை மூடிக்கொண்டு அதன் மீது வெள்ளரிக்காய் துண்டுகளை சிறிது நேரம் வைத்திருங்கள்.


இரண்டு உள்ளங் கைகளையும் ஒன்றோடொன்று ஒட்டி வைத்து சிறிது நேரம் நன்றாகத் தேயுங்கள். 

அவ்வாறு செய்யும் போது உள்ளங்கை இரண்டும் நன்கு சூடாகும். அந்த சூட்டை, மூடிய கண்கள் மீது வையுங்கள். இது கண்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

கண்களின் ஆரோக்கி யத்தை பாதுகாக்க 30 வயதைத் தாண்டியவர்கள் 2 ஆண்டு களுக்கு ஒருமுறையும், 40 வயதைத் தாண்டியவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையும், 50 வயதைத் தாண்டியவர்கள் 6 மாதத்துக்கு ஒரு முறையும் 

டாக்டரிடம் கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. கண் பார்வை குறைதல், படிப்பதில் சிரமம், பார்ப்பதில் சிரமம், கண்களில் வலி, புண், எரிச்சல், சிவந்து போகுதல் போன்ற தொந்தரவுகள் 

ஏற்பட்டால் உடனே முறையான சிகிச்சையை மேற்கொண்டு விட வேண்டும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கண் நலனை பேணுவதில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
Tags:
Privacy and cookie settings