சீனாவில் வாகனங்கள் தொடர்ச்சியாக ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்து !

சீனாவில் ஜிபோ நகரில் வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றின் மீது ஒன்று மோதியதால் 11 பேர் பலியாகினர். 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சீனாவில் வாகனங்கள் தொடர்ச்சியாக ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்து !
சீனாவின் ஜிபோ நகரில் உள்ள முக்கியமான சாலையில் எப்போதும் வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும். 

அந்த சாலையில் டிராக்டர் ஒன்று அதிக பாரத்துடன் சாலையை கடக்க முயன்றது. அப்போது சாலையை கடக்கும் போது எதிரே வந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து

சாலையை கடக்க முயன்ற டிராக்டருடன் பயங்கர மாக மோதியது. அதனை பின் தொடர்ந்து வந்த பஸ்ஸும் மோதி விபத்துக்குள்ளானது. 

சாலையில் தொடர்ந்து வாகனங்கள் வந்து கொண்டிருந்தால் வாகன ஓட்டிகள் பிரேக் போட்டதில் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்துக் குள்ளானது. 
இந்த சாலை விபத்தில் 11 பேர் பலியாகி உள்ளதாகவும், 21 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அதில் 2 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக சீன அரசின் சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:
Privacy and cookie settings