அரசு பஸ் டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு | Sensation of Stepping away from the Bus Tire |

குமரி மாவட்டம் மார்த்தாண் டத்தில் இருந்து நாகர் கோவிலுக்கு நேற்று மதியம் ஒரு அரசு பஸ் வந்து கொண்டி ருந்தது. பஸ், நாகர் கோவிலை நெருங்கிக் கொண்டி ருந்த போது 
சுமார் 65 பயணிகள் பஸ்சில் இருந்தனர். சிலர் படிக்கட்டில் நின்று கொண்டு இருந்தனர். மதியம் 2.30 மணியளவில் இந்த பஸ், நாகர் கோவில் டெரிக் சந்திப்பு பஸ் நிறுத்தத்தை நெருங்கிக் கொண்டி ருந்தது. 

பஸ் வேகத்தை படிப் படியாக டிரைவர் குறைத்தார். அந்த சமயத்தில் திடீரென டமார் என பயங்கர சத்தம் கேட்டது. பஸ்சும் வேகமாக குலுங்கியது.

பஸ்சுக்குள் இருந்த பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து அலறினர். இந்த சத்தம் கேட்டு அந்த பகுதியில் நின்று கொண்டி ருந்த பொதுமக்கள் அலறிய வாறு ஓடினர். 

சில வினாடிகள் வரை என்ன நடந்தது என்பதை யூகிக்க முடிய வில்லை. அந்த நேரத்தில் அரசு பஸ்சின் முன் பக்க வலது பக்க டயர் கழன்று முன்னால் ஓடிக் கொண்டு இருந்தது.

பஸ்சில் இருந்து ஓடிய டயர் சுமார் 20 அடி தூரம் கடந்து சாலையின் மறுபுறம் விழுந்தது. உடனடி யாக பஸ்சில் இருந்த பயணிகள் அவசர அவசர மாக கீழே இறங்கினர்.

குழந்தை களை ஜன்னல் வழியாக வெளியே இறக்கினர். பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகள் மாற்று பஸ்களில், நாகர் கோவில் வடசேரி பஸ் நிலைய த்துக்கு வந்தனர். 

சம்பவம் குறித்து அறிந்ததும் போக்கு வரத்து கழக அதிகாரிகள் வந்து, அவசர, அவசர மாக அந்த பஸ்சை எடுத்து சென்றனர்.
Tags:
Privacy and cookie settings