ஆர்வமிக்க +1 மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி !

அறிவியலில் ஆர்வமிக்க பிளஸ் ஒன் மாணவர்கள் ஐந்து நாள் இலவச அறிவியல் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். 
ஆர்வமிக்க +1 மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி !
பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்து வதற்காக இன்ஸ்பயர் இன்டர்ன்ஷிப் திட்டத்தை மத்திய அரசின் அறிவியல் – தொழில் நுட்பத்துறை செயல்படுத்தி வருகிறது. 

தமிழக மாணவர் களுக்கான பயிற்சி முகாமை நடத்தும் பொறுப்பை சென்னை பல்கலைக் கழகத்தின் ஜியாலஜி துறை ஏற்றுக் கொண்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் நடைபெறும் இந்த 5 நாள் பயிற்சி முகாமில் 150 மாணவர்கள் சேர்த்து க்கொள்ளப்படுவர். முதல் பயிற்சி முகாம் ஆகஸ்ட் 25 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இரண்டாவது பயிற்சிமுகாம் அக்டோபர் 20 முதல் 24-ஆம் தேதி வரையிலும், மூன்றாவது பயிற்சி முகாம் டிசம்பர் 22 முதல் 26-ஆம் தேதி வரையிலும் நடைபெறும்.

பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகள் இலவசம். அறிவியல் பாடங்களில் செயல்முறை விளக்கங்களுடன் வகுப்புகள் நடைபெறும்.
மாணவர்களே தங்களுக்குப் பிடித்த அறிவியல் செய்முறைகளை செய்து பார்க்கவும் அனுமதிக்கப்படுவர். பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், அறிவியல் தலைப்புகள் கொடுக்கப்பட்டு

மாணவர் களிடையே போட்டிகள் நடத்தப்படும். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
Tags: