இறந்த பின்னரும் உயிர் வாழ முடியும் | Life after death !

பிறக்கும் முன்னாலே இருந்தது என்ன? உனக்கும் தெரியாது. இறந்த பின்னாலே நடப்பது என்ன? எனக்கும் புரியாது’- இது தத்துவக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய ‘நிலையாமை’ தொடர்பான ஒரு பாடலின் வரி.
வளரும்போது, என்னவாக வேண்டும் என யோசனை செய்திருப்பீர்கள். இறந்த பின் என்னவாகலாம்? என யோசித்தது உண்டா? நம் மனது இளமையாக இருந்தாலும்,

நமது ஆன்மா தூய்மையாக இருந்தாலும், நம் எல்லோருடைய உடலும் ஒருநாள் கட்டாயமாக செயலிழக்க வேண்டி வரும்.

அதன் பின்னர் என்னவாக வேண்டும் என எப்போதாவது யோசனை செய்ததுண்டா? பார்சிலோனா நாட்டைச் சேர்ந்த பிரபல டிசைன் ஸ்டூடியோவான

எஸ்ட்டுடிமோலின் நிறுவனத்தின் யோசனையில் உருவாகியுள்ள பயோஸ் என்ற நிறுவனம், நாம் இறந்த பின்னர் மரமாக மற்றவர்களுக்கு நிழலும், கனியும் தர ஒரு தாழியைத் தயார் செய்துள்ளது.

நாம் இறந்த பின்னர் நமது சாம்பலை இந்தத் தாழியின் அடிப்பாகத்தில் இட்டு அதன் மீது இந்நிறுவனம் வழங்கும் மரம் வளரத் தேவையான மண் மற்றும் உரம் நிறைந்த கலவையுடன் அவர்கள் வழங்கும் 

ஐந்து வகை மர விதைகளையோ அல்லது உங்களுக்கு விருப்பமான வேறு ஏதேனும் மரத்தின் விதையையோ வைத்து மண்ணில் நேரடியாக புதைக்கலாம்.

 நமக்கு மட்டுமல்லாது, நமது செல்லப்பிராணிகளின் சாம்பலையும் இதுபோல விரும்பும் மரமாக மாற்றிக்கொள்ள இந்நிறுவனம் வாய்ப்பளித்துள்ளது.

இந்தத் தாழி மக்கும் சக்திகொண்ட இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளதால் இதனை புதைப்பதனால் பூமிக்கு எவ்வித பிரச்சனைகளும் இல்லை. மரமாக வாழ்ந்து நம்மால் பலருக்கு பலன் அளிக்க முடியும். 

இறந்த பின்னும் பூமியில் நிலைத்து வாழ வழிசொல்லும் நேர்த்தியான முறையில் உருவாக்கப்பட்டுள்ள இதற்கான விளம்பரத்தைக் காண..,
Tags:
Privacy and cookie settings