ஐஐடி, ஐஐஎம்-ல் இரண்டாயிரம் பேர் வெளியேற்றம் | IIT, IIM-in-out, two thousand !

நுழைவு தேர்வில் தேர்ச்சியடைந்து கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் ஐஐடி, ஐஐஎம் கல்லூரிகளில் உள் நுழையும் மாணவர்கள், தங்கள் படிப்பினை இடைநிறுத்தம் செய்வது அதிகரித்துள்ளதாக கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய ஆய்வின்படி, இத்தகைய கல்விநிறுவனங்களில் இருந்து கடந்த 2 ஆண்டுகளில் 2000 பேர் தங்கள் கல்வி பயணத்தை பாதியில் கைவிட்டு வெளியேறியுள்ளனர்.

இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று ஏழை மாணவர்கள் இங்குள்ள கல்வி கற்கும் சூழ்நிலைகளில் பல இன்னல்களை சந்திப்பதே என்கின்றனர் கல்கத்தா ஐஐஎம் நிறுவனத்தின் பேராசிரியர்கள் கருதுகின்றனர்.

ஐஐஎம் மாணவர்களிடையே ராகிங் போன்ற பழக்கங்களை ஒழிக்க இரண்டாம் ஆண்டு மாணவர் மூலம் ‘மேண்டோர்டு’ என்னும் நண்பர் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் மனதளவில் பல வீனமாவதை தடுக்க ஆசிரிய வழிகாட்டி பயிற்சியும் அளிக்கிறது.

இருப்பினும் கேன்டீன் போன்ற இடங்களில் உயர்நிலை மாணவர்களுடன் ஏழை மாணவர்களுக்கு ஏற்படும் வேறுபாடுகளே இந்த இடை நிறுத்தத்திற்கு காரணம் 

என கொல்கத்தா ஐஐஎம் இயக்குனர் பாகுல் தோலக்கியா கூறுகிறார். இத்தகைய ஏற்ற தாழ்வினால் பல மாணவர்களின் கல்வி கேள்வி குறியாக்கியுள்ளது.
Tags:
Privacy and cookie settings