சிகரெட்டை ஏன் பிடிக்கிற? சொல்லு? சார் பிடிக்காட்டி கீழே விழுந்திரும் இப்படி சிகரெட் குடிப்பதைப் பற்றி எண்ணற்ற ஜோக்குகள் உள்ளன. 
சிகரெட்டை நிறுத்தலாம் வாங்க !
ஏதோ காரணம் சொல்லி சிகரெட்டை விட முடியாதவர்களும் பல முறை சிகரெட்டை விட்டவர்களும் தான் அதிகம்.

கேன்சரில் ஆரம்பித்து ஆண்மைக் குறைவு வரை வருகிறது என சிகரெட் அட்டையிலேயே எச்சரிக்கை வாசகங்களை அச்சடித்தும் புகைப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
சிகரெட்டை நிறுத்துவதற்கு எலெக்ட்ரானிக் சிகரெட், நிகோடின் சூயிங்கம், கையில் ஒட்டிக் கொள்ளும் பேட்ச் என எத்தனையோ வழிகள் இருந்தும், அதை ஏன் நிறுத்த முடிவதில்லை?

டாக்டர் ஆனந்த் பாலன், போதை மீட்பு சிகிச்சை நிபுணர்...‘‘பல ஆண்டுகளாக புகைத்துக் கொண்டிருந்தவர்கள் இன்றோடு நிறுத்தி விடலாம் என முடிவு செய்வார்கள்.

இதற்கு கோல்டார் கீ என்று பெயர். திடீரென்று நிறுத்துவது மிகவும் கடினமான விஷயம். 
மீண்டும் புகைப் பிடித்தலுக்கு தூண்டப்பட்டாலோ, முன் குடித்துக் கொண்டிருந்த எண்ணிக்கையை விட அதிகமாக பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். 

சிகரெட்டை நிறுத்துவதைப் பொறுத்த வரை சம்பந்தப்பட்ட நபர் சுயமுனைப் புடனும் விருப்பத் துடனும் மட்டுமே செய்ய வேண்டும்.

புகைப்பதை நிறுத்தும் போது, மூளையானது பழகிய நிகோடினை கேட்கும். சிகரெட்டில் நிகோடின், கோல்டார், கார்பன் மோனாக்சைடு போன்ற மூலக்கூறுகள் உள்ளன. 

கோல்டார் என்பதுதான் கார்சினோஜெனிக் காரணிகளை தூண்டி கேன்சர் வருவதற்குக் காரணமாக அமையும். 
அதனால், நிகோடினை மட்டும் மூளைக்கு அனுப்பி அதனை திருப்தியுறச் செய்து, சிகரெட் புகைத்தலை தவிர்க்க செய்யும் சிகிச்சைக்கு ‘நிகோடின் ரீபிளேஸ்மென்ட் தெரபி’ என்று பெயர்.

நிகோடின் சூயிங்கம், உடலில் ஒட்டிக் கொள்ளும் நிகோடின் பேட்ச் பயன்படுத்தியும் பயன் அடையலாம். சிகரெட் குடிக்கும் எண்ணம் வரும் நேரத்தில் நிகோடின் சூயிங்கத்தை வாயில் போட்டு மெல்லலாம்.
சிகரெட்டை நிறுத்தலாம் வாங்க !
நிகோடின் சூயிங் கம் காரமான சுவையில் இருக்கும். ஒருமுறை மென்றுவிட்டு கடைவாய் பகுதியில் அடக்கி வைத்துக் கொள்ளலாம். 

நிகோடின் பேட்ச்சை ரத்த ஓட்டம் அதிகமான பகுதியில் ஒட்டிக் கொள்ளலாம். உடலுக்குத் தேவையான நிகோடின் இதன் மூலம் கிடைத்து விடும். 
சிகரெட் பிடிக்கும் எண்ணம் குறையும்...’’ டாக்டர் வெங்கடேஷ் ராமச்சந்திரன், மனநல மருத்துவர்...

சிகரெட்டை நிறுத்துவதற்கான சிகிச்சைக்கு வருபவர்களின் குடும்பச் சூழலையும் பணியிடச் சூழலையும் அறிந்து கொண்டு தான் அவர்களுக்கான சிகிச்சையை ஆரம்பிப்போம்.

குறிப்பிட்ட நபருக்கு எதற்காக சிகரெட் தேவைப்படுகிறது, இப்போது எதற்காக விட நினைக்கிறார்கள் என்பதையும் கேட்போம்.

சிலர் தாங்களாகவே எலெக்ட்ரானிக் சிகரெட்டை பயன்படுத்தி சிகரெட்டை விட முடியுமா என்று பார்க்கிறார்கள்.

இது மிகவும் தவறான அணுகு முறை. பல நிறுவனங்கள் எலெக்ட்ரானிக் சிகரெட்டை தயாரித்தாலும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படாத ஒன்றாகவே இருக்கிறது. 
ஒரு எலெக்ட் ரானிக் சிகரெட்டை புகைப்பது 50 சிகரெட்டுகள் புகைப்பதற்குச் சமம் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. 

மருத்துவ ஆய்வில் நிரூபிக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே நாங்கள் பரிந்துரைப்போம். அதனால், எலெக்ட்ரானிக் சிகரெட்டுகளை யாருக்கும் பரிந்துரைப்பதில்லை.

சிலர் மைல்ட் சிகரெட்டுகளுக்கு மாறி, அதன் பிறகு விடலாம் என்று எண்ணுவார்கள். ஒருவர் ஒரு நாளைக்கு 10 சிகரெட் பிடிக்கிறார் என்றால் மைல்ட் சிகரெட்டில் 20 சிகரெட் புகைத்தால் தான் திருப்தி ஏற்படும். 
அவரால் விட முடியாமல் அதிகமாக புகைக்க ஆரம்பித்து விடுவார். ஆயிரத்தில் ஒருவருக்குத் தான் சிகரெட்டை உடனடியாக நிறுத்த முடியும். 

நிகோடின் சூயிங்கத்தை உபயோகிக்கச் சொல்கிறோம். அலுவலகத்தில் மென்று கொண்டு இருக்க முடியவில்லை என்பவர்கள், உடலில் நிகோடின் பேட்ச் ஒட்டி சமாளிக்கலாம்.
சிகரெட்டை நிறுத்தலாம் வாங்க !
நிக்கோலேண்ட்ஸ் என்று மிட்டாய் மாதிரியான வடிவத்திலும் நிகோடின் தேவையை நிறைவேற்றலாம். மிட்டாய் போலவே வாய்க்குள் வைத்து சப்பி சாப்பிட வேண்டும்.

சிகரெட் பிடிக்கும் நேர இடைவெளியையும் அதிகமாக்கிக் கொண்டே வர வேண்டும். 10 சிகரெட் குடிப்பது 5 சிகரெட்டாக குறையும். 

இப்படி மெல்ல சிகரெட்டுகளின் எண்ணிக்கை அளவை குறைத்து, ஒரு நாள் நிறுத்தி விட வேண்டும். 

சிகரெட்டை நிறுத்திய பின்னும், 6 மாத காலம் வரை, மறுபடியும் பிடிக்கலாமா என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றும்.
அதற்கு இடம் கொடுக்காமல் 6 மாத காலம் தாக்குப் பிடித்து விட்டால், பிறகு சிகரெட் பக்கம் அவ்வளவு எளிதில் போக மாட்டார்கள். 

இதெல்லாம் பலன் அளிக்க வில்லையெனில் ஆன்டி டிப்ரசன்ட் மாத்திரைகள் கொடுத்து, சிகரெட் பிடிக்கும் எண்ணத்தைப் போக்க முயற்சி செய்வோம். 
சிகரெட்டை நிறுத்த விரும்பும் நபர் மிகுந்த சுயக் கட்டுப்பாடுடன் இருந்தால் எளிதாக இப்பழக்கத்தை விட்டு விடலாம். 

அதோடு, குடும்பத்திடமும் இது பற்றி தெரிவிக்க வேண்டும். அப்போது தான் மனநலம் சார்ந்த ஆதரவும் அவருக்குக் கிடைக்கும்...நன்றி குங்குமம்.