தர்காவில் ஆண்களுடன் இணைந்து பெண்களும் வழிபாடு நடத்தலாம் !

மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவில் ஆண்களுடன் இணைந்து பெண்களும் வழிபாடு நடத்த அனுமதி வழங்கி மும்பை ஐகோர்ட் உத்தர விட்டுள்ளது. 
தர்காவில் ஆண்களுடன் இணைந்து பெண்களும் வழிபாடு நடத்தலாம் !
பெண்களுக்கு தடை விதிப்பது என்பது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தர்காவில் பெண்களின் பாதுகாப்பை மாநில அரசை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் கூறியுள்ளது.

பொது நல வழக்கை தொடர்ந்த நூர்ஜெஹான் நியாஜ் மற்றும் ஜாகியா சோமன் தீர்ப்பு குறித்த கூறுகையில், 

குரான் அடிப்படையிலும், அரசியல் சாசனம் அடிப்படையிலும் எங்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமை நிலை நாட்டப் பட்டுள்ளது. 

கடந்த 2012 முன் வரை பெண்கள் தர்காவிற்குள் அனுமதிக்கப் பட்டனர் எனக் கூறினார்கள். 

இந்த வழக்கில் மகாராஷ்டிரா அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தர்காவிற்குள் நுழைய பெண்களுக்கு தடை விதிக்க தர்கா நிர்வாகத்திற்கு உரிமையில்லை. 
தொழுகை நடத்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முழு உரிமை உள்ளது. நிர்வாகத்தின் தடை, பாலின சமநிலையை மீறுவதாகும் எனக்கூறியது.

தர்கா நிர்வாகம் சார்பில் வாதிடுகையில், தர்காவிற்குள் கூட்டம் அதிகமாக இருக்கும். அங்கு பெண்களுக்கு பாதிப்பில்லை எனக்கூறப்பட்டது.
Tags:
Privacy and cookie settings