கொழுப்பை குறைக்கும் கத்திரிக்காய் !

இன்று வரை கத்திரிக்காய் சைவமா அசைவமா என கண்டுப்பிடிக்க ஒரு குழு ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருந்தாலும், அதில் இருக்கின்ற ஆரோக்கிய நன்மைகள் பற்றி வேறொரு குழு ஆராய்ச்சி செய்து முடித்துள்ளது.
கொழுப்பை குறைக்கும் கத்திரிக்காய் !
நல்லதை எல்லாம் உணவில் ஒதுக்கும் பழக்கத்தை நாம் மிக சரியாக கடைப் பிடிப்போம். அந்த வகையில், மிளகு, வெங்காயத்திற்கு அடுத்ததாக நம்மில் அதிக மானவர்கள் உணவில் ஒதுக்கும் உணவாக இருப்பது கத்திரிக்காய்.

ஆனால், இதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நீங்கள் அறிந்தப் பின்பு அதை தொடர்ந்து செய்ய மாட்டீர்கள், செய்யவும் கூடாது. 

சரி, இனி கத்திரிக்காய் சாப்பிடுவதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்…

கொழுப்புச் சத்தைக் குறைக்கும் கத்தரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்தைக் குறைக்க உதவும் ஓர் உன்னதமான மருந்தாகும்.

கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து பசியை அடக்கி வைப்பதால், உடல் எடை குறைவதற்கு உதவுகிறது.
புத்துணர்வைத் தரும் கத்தரிக் காயின் தோலில் உள்ள ஆன்த்தோ சயனின் என்னும் வேதிப்பொருள் உடலின் சோர்வைப் போக்கிப் புத்துணர்வைத் தரக் கூடியது, 

அது மட்டுமின்றி ஆன்தோ சையனின் புற்றுநோய் எனப்படும் கேன்சர் செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு தடுக்க வல்லது.

சுவாசப் பிரச்சனைகள் கத்திரிகாய் இலைகள் ஆஸ்துமா, மூச்சுக் குழல் நோய்கள், போன்ற சுவாசக் கோளாறுகளை சரி செய்ய உதவும்.

நார்ச்சத்து கத்தரிக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு மென்மையும், பலமும் தரவல்லது. 

கத்தரிக்காய் நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் மலச்சிக்கலைப் போக்க வல்லது மட்டுமின்றி சர்க்கரை நோயையும் தடுக்க வல்லது.

நல்ல தூக்கத்தை உண்டாக்கும் கத்தரிக்காயை வேக வைத்து அத்துடன் போதிய தேன் சேர்த்து மாலை நேரத்தில் சாப்பிட நல்ல தூக்கத்தை உண்டாக்கும். தூக்க மின்மை பிரச்சனை குணமாகும்.
இதய பாதுகாப்பு கத்தரிக்காயில் அடங்கியுள்ள நாசுமின் என்னும் வேதிப் பொருள் ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான இரும்புச் சத்தைக் குறைத்து வெளியேற்ற உதவுகிறது. இதனால் மாரடைப்பு தவிர்க்கப்டுகிறது.

இளமை கத்தரிக்காயில் பொதிந்திருக்கும் ஆன்த்தோ சயானின் என்னும் வேதிப்பொருள் வயது முதிர்வைத் தடுத்து இளமைத் தோற்றத்துக்கு வகை செய்கிறது.

புற்றுநோய் தடுக்கும் கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் தோலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுத்து தோல் ஆரோக்கிய மாயிருக்க உதவுகிறது
Tags:
Privacy and cookie settings