இவைகளும் உங்கள் தலைமுடி உதிர காரணம் !

ஒவ்வொரு முறை தலையை சீவும் போதும் கையில் கொத்தாக முடி வருகிறதா? அதைப் பார்க்கும் போதெல்லாம் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகிறீர்களா? 


எவ்வளவு முயற்சித்தும் தலைமுடி உதிர்வதை தடுக்க முடியவில்லையா? முதலில் இக்கட்டுரையைப் படியுங்கள். சொட்டை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவும் சில ஆயுர்வேத வழிகள்! தலைமுடி உதிர்வதை நிறுத்த வேண்டுமானால், 

அதற்கான காரணத்தை முதலில் அறிய வேண்டும். அதில் பலருக்கும் தெரிந்த காரணங்கள் மோசமான தலைமுடி பராமரிப்பு, அதிகப்படியான தலைமுடி பராமரிப்பு

பொருட்களைப் பயன்படுத்துவது, வறட்சி, பொடுகு போன்றவை. தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில எளிய கிராமத்து வைத்தியங்கள்! ஆனால் அதையும் தாண்டி வேறுசில காரணங்களும் உள்ளன.

அதில் சில பலருக்கு தெரியாதவைகளாகும். சரி, இப்போது நீங்கள் அறிந்திராத தலைமுடி உதிர்வதற்கான வேறுசில காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.

அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் ஒருவர் அதிர்ச்சிகரமான நிகழ்வுகளான விபத்து, பிடித்தவர் களின் இறப்பு போன்ற வற்றால் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானால், அதன் காரணமான மன இறுக்கம் ஏற்பட்டு, தலைமுடி உதிர ஆரம்பிக்கும்.


வைட்டமின் ஏ மாத்திரைகள் வைட்டமின் ஏ குறைபாடு உள்ளது என்று, வைட்டமின் ஏ மாத்திரை களை தொடர்ச்சியாக எடுத்து வந்தால், மயிர் கால்கள் பலவீனமாகி, தலைமுடி உதிர்வதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

புரோட்டீன் குறைபாடு ஆரோக்கி யமான தலைமுடிக்கு புரோட்டீன் மிகவும் இன்றியமை யாத ஊட்டச்சத்து. 

புரோட்டீன் தான் தலைமுடியின் வலிமைக்கு காரணம். அதன் குறைபாடு ஏற்பட்டால், அதிகப்படியான முடியை இழக்க வேண்டி வரும். பரம்பரை சில நேரங்களில், மரபணுக்களும் தலைமுடி உதிர்வதற்கு காரணமாக இருக்கும். 

உங்கள் பெற்றோர்கள் அல்லது தாத்தா பாட்டிகளுக்கு வழுக்கை தலை இருந்தால், உங்களுக்கும் வழுக்கை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதன் முதல் கட்டமாக தலைமுடி அதிகம் உதிர ஆரம்பிக்கும்.

திடீர் எடை குறைவு கடுமையான டயட்டை மேற்கொண்டு, குறைந்த காலத்தில் அதிகளவு உடல் எடையைக் குறைத்தால், ஊட்டச்சத்து குறை பாட்டினால் மயிர்கால்கள் பலவீனமாகி, உதிர ஆரம்பிக்கும்.


நாள்பட்ட காய்ச்சல் காய்ச்சலால் 15 நாட்கள் அல்லது அதற்கு மேல் அவஸ்தைப்பட்டு வந்தால், அதன் காரணமாகவும் தலைமுடி அதிகம் உதிரும்.

எனவே காய்ச்சல் வந்தால், சாதாரணமாக விடாமல், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறுங்கள்.

பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரை நிறைய பெண்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு, பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுப்பார்கள்.

இப்படி இந்த மாத்திரைகளை அதிகமாக எடுத்த பல பெண்களின் உடலில் திடீர் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, நிறைய முடி கொட்டியுள்ளது.
Tags:
Privacy and cookie settings