சீனாவில் கண்ணாடி பாலத்தில் பெண்கள் யோகாசனம் !

சீனாவில் தரையிலிருந்து 590 அடி உயரத்தில் நிர்மாணிக்கப் பட்டுள்ள கண்ணாடிப் பாலமொன்றில் யுவதிகள் பலர் யோகாசனத்தில் ஈடுபடுவதை படங்களில் காணலாம்.
சீனாவில் கண்ணாடி பாலத்தில் பெண்கள் யோகாசனம் !
ஹுனான் மாகாணத்தின் ஷினியுஷாய் தேசிய புவியியல் பூங்காவில் நிர்மாணிக்கப்பட்ட இப்பாலம் அண்மையில் திறக்கப்பட்டது.

984 அடி நீளமான இப்பாலத்தின் அடிப்பகுதி 24 மில்லி மீற்றர் தடிப்புடைய கண்ணாடியினால் அமைக்கப்பட்டுள்ளது.

அக்கண்ணாடிக்கும் நிலத்துக்கும் இடையிலான சுமார் 590 உயரமான பகுதியில் காற்றைத் தவிர எதுவுமில்லை.
சீனாவில் கண்ணாடி பாலத்தில் பெண்கள் யோகாசனம் !
திகிலான அனுபவத்தை பெற விரும்பும் சுற்றுலா பயணிகள் இப்பூங்காவில் நடந்து செல்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால், இடையிலேயே சிலர் பீதிக்குள்ளாகி அழுத சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் இப்பாலத்தின் மீது யுவதிகள் பலர் யோகாசனத்தில் ஈடுபட்டனர்.
சீனாவில் கண்ணாடி பாலத்தில் பெண்கள் யோகாசனம் !
இயற்கைக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இணக்கத்தையும் பசுமையான வாழ்க்கை முறையையும் ஊக்குவிக்கும் நோக்குடன் இந்நிகழ்வு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings