தர்ம சங்கடத்தை உருவாக்கும் வாய் துர்நாற்றத்தை தடுக்கும் வழி !

ஒவ்வொருவரும் வாழ்நாளின் சில நேரங்களில் வாய் துர் நாற்றத்தால் தர்ம சங்கடத்தை சந்தித்திருப்போம். 
தர்ம சங்கடத்தை உருவாக்கும் வாய் துர்நாற்றத்தை தடுக்கும் வழி !
இந்நிலை வெங்காயத்தை அதிகமாக உட்கொண்டதாலோ அல்லது மோசமான வாய் சுகாதாரத்தினாலோ, சொத்தை பற்களினாலோ, 

ஈறு பிரச்சனை களினாலோ அல்லது நீர் வறட்சியினால் கூட இருக்கலாம். 
நாம் வெளிப்புறத்தில் அழகாகவும், சுத்தமான வராகவும் இருந்தால் மட்டும் போதாது. 

நம் அருகில் வந்து பேசுவோர் எவ்வித அசௌகரியத்தையும் உணராதவாறு நம் வாயை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

வாய் துர்நாற்றத்தைப் போக்குவது எப்படி என்று பலரும் தெரியாமல் திணறுவார்கள். அத்தகையவர் களுக்கு இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும்.

ஏனெனில் இக்கட்டுரையில் வாய் துர் நாற்றத்தைத் தடுப்பதற்கான சில ட்ரிக்ஸ் கொடுக்கப் பட்டுள்ளது. 

அவற்றைப் படித்து பின்பற்றினால், நிச்சயம் வாய் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம்.

வாய் துர்நாற்றம் வீசுவதற்கு சொத்தை பற்கள் அல்லது ஈறு நோய்கள் காரணமாக இருக்கலாம். 
எனவே உங்களுக்கு இப்பிரச்சனைகள் இருந்தால் உடனே பல் மருத்துவரை சந்தித்து, சிகிச்சை மேற்கொள்ளுங்கள். 

இல்லாவிட்டால் இப்பிரச்சனை முற்றி, பின் நாளடைவில் பெரிய சிக்கலை சந்திக்கக்கூடும். 

எனவே வாயில் ஏதேனும் பிரச்சனை இருப்பது போல் நீங்கள் உணர்ந்தால் சற்றும் தாமதிக்காமல் உடனே பல் மருத்துவரை அணுகுங்கள்.
தர்ம சங்கடத்தை உருவாக்கும் வாய் துர்நாற்றத்தை தடுக்கும் வழி !
வாய் துர்நாற்றத்தைப் போக்க சிறந்த எளிய வழி நல்ல வாய் சுகாதாரம் தான். அதற்கு தினமும் இரண்டு முறை பற்களைத் துலக்க வேண்டும்.

ஒருவேளை இருமுறை பற்களைத் துலக்கி வந்தும் வாய் துர்நாற்றம் இருந்தால், வாரம் ஒரு முறை பேக்கிங் சோடா பயன்படுத்தி பற்களைத் துலக்குங்கள்.
விக்கெட் கீப்பர்களுக்கு நடக்கும் சோகம் - விரல் போன கதை !
இதனால் வாயல் அசிடிட்டியின் அளவு குறைந்து, வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியும் தடுக்கப்படும்.

உடலில் போதிய அளவில் தண்ணீர் இல்லாவிட்டாலும், வாய் துர்நாற்றம் வீசக்கூடும். 

எனவே தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். அதிலும் அடிக்கடி தண்ணீர் குடிக்கவும் செய்யுங்கள். 
இதனால் வாயில் ஏதேனும் உணவுத் துகள்கள் பற்களின் இடையில் சிக்கி யிருந்தால், அவை வெளியேற்றப்படும். 

மேலும் அடிக்கடி தண்ணீர் குடிக்கும் போது வாய் உலர்ந்து போகாமல் இருக்கும்.

வாய் சுத்தம் என்பது பற்களை மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்வதில் இல்லை. நாக்கையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
புற்று நோயினைத் தடுக்கும் கேரட் !
அதற்கு ஒவ்வொரு முறை பற்களைத் துலக்கும் போதும் நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். 

ஏனெனில் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியா வானது நாக்கில் தான் வளர்கிறது.
தர்ம சங்கடத்தை உருவாக்கும் வாய் துர்நாற்றத்தை தடுக்கும் வழி !
சுகர் ப்ரீ சூயிங்கம்மை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் எச்சில் உற்பத்தி தூண்டப்படும். 

வாயில் எச்சில் உற்பத்தி அதிகம் இருந்தால், பாக்டீரியாக்களில் வாயில் இருந்து வெளியேற்றப்படும்.
உப்பு தானே என்ன செய்து விடும் என்ற அசட்டை வேண்டாம் !
கொத்த மல்லியில் குளோரோபில் ஏராளமாக உள்ளது. இது வாயை புத்துணர்ச்சி யூட்டும் ஓர் சிறந்த பொருள். எனவே தினமும் உணவை உட்கொண்ட 

பின் சிறிது கொத்தமல்லியை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் வாய் துர்நாற்றம் தடுக்கப்படும். 

க்ரீன் டீயில் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கும் ஆன்டி -பாக்டீரியல் பொருள் உள்ளது.

மேலும் இதில் உள்ள பாலிஃபீனால்கள், வாயில் உள்ள சல்பரை நீர்க்கச் செய்து விடும். 
முக்கியமாக தினமும் ப்ளாஷ் செய்வதையும் வழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். 
ஏனெனில் ப்ளாஷ் மூலம் பற்களின் இடுக்குகளில் உள்ள உணவுத் துகள்கள் வெளியேற்றப்படும். 

இதனால் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டு, வாய் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.
Tags:
Privacy and cookie settings