உங்கள் தகவல் படியுங்கள் பகிருங்கள் !

பரிசுகள் வழங்க பயன்படுத்தப்படும் ‘தேயுங்கள் வெற்றி யடையுங்கள்’ (Scarch and win Card) அட்டைக்கு முதன் முதலில் அமெரிக்காவிலுள்ள Astro - Med inc என்ற நிறுவனம் தான் வடிவமைப்பு உரிமை பெற்றது.
உங்கள் தகவல் படியுங்கள் பகிருங்கள் !
ஃபார்முலா 1 என்ற சொல்லால் கார் பந்தயங்கள் அழைக்கப் படுகின்றன. முதலில் இப்பந்தயங்கள் Formula A என்ற பெயரால் அழைக்கப் பட்டன. 

மோட்டார் பந்தயங்களில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் (Formula) ஆரம்பத்தில் வகுக்கப்பட்டன. இதுவே பந்தயங்களின் பெயராக மாறி விட்டது.

தென்னிந்தியாவுக்கு வெளியே முதன் முதலில் 1934ம் ஆண்டு பரதநாட்டியம் ஆடியவர் தஞ்சாவூர் பாலசரஸ்வதி.

குரேஷியாவைச் சேர்ந்த Slavoljub Penkala பேனாவைக் கண்டுபிடித்தார். இவர் பெயராலேயே பேனா Pen என அழைக்கப் படுகிறது.

'உலகைச் சுற்றி எண்பது நாட்கள்’ என்ற நூலில் 1872-ம் ஆண்டு அக்டோபர் 2-ல் பயணம் துவக்கப்பட்டு 1872ம் ஆண்டு டிசம்பர் 21-ல் பயணம் முடிகிறது.

டான்டலம் என்ற தனிமம் டான்டலஸ் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டு அவர் பெயராலேயே அழைக்கப் படுகிறது. நையோபியம் என்ற தனிமத்தை டான்டலஸின் மகள் நையோபி கண்டுபிடித்தார். 
இந்த இரண்டு தனிமங்களும் தந்தை மற்றும் மகள் பெயரால் அழைக்கப்படும் இரண்டு தனிமங்கள் ஆகும். பிரேசிலின் ரியோ நகரில் மரகானா விளையாட்டு மைதானம் உள்ளது. 

இதே பெயரில் பெல்கிரேடு (செர்பியா) நகரிலும் ஒரு விளையாட்டு மைதானம் உள்ளது.

வடஅமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டின் தலைநகர் லாபாஸ். இங்கு உலகின் மிக நீளமான மற்றும் உயரமான கேபிள் கார் பாதை உள்ளது.

நமீபியாவில் தெற்கு குன்னினி பகுதியில் நமீப் பாலைவனத்தில் யானைகள் உள்ளன. உலகில் யானைகள் காணப்படும் ஒரே பாலைவனம் இது தான்.

மகிழ்ச்சிகரமாக மக்கள் வாழும் 158 நாடுகளின் பட்டியலில் இந்தியா 117வது இடத்தைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், ஈராக் ஆகிய நாடுகளை விட இந்தியா இப்பட்டியலில் கீழே உள்ளது. 

சுவிட்சர்லாந்து தான் உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடு.பிரபல இத்தாலிய ஓவியர் பிக்காஸோ வரைந்த ‘அல்ஜியர்ஸின் பெண்கள்’ என்ற ஓவியம் 

கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் 140 மில்லியன் டாலருக்கு ஏலம் போகும் என மதிப்பிடப்பட்டு 160 மில்லியன் டாலருக்கு, அதாவது ரூ.1026 கோடிக்கு ஏலம் போயிற்று.
2014-ம் ஆண்டு 68,000 குழந்தைகள் இந்தியாவில் காணாமல் போனதாகப் புகார்கள் அளிக்கப்பட்டன. இவர்களில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை. 

காணாமல் போன குழந்தைகளில் 63 சதவீதத்துக்கு மேல் பெண் குழந்தைகள். இதில் மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன.

ஜெல்லி மீன் பலகோடி ஆண்டுகளாக பூமியில் வாழ்கிறது. இதற்கு காதுகள், கண்கள், மூக்கு, மூளை, இதயம் இல்லை. தலையும் கூட இல்லை. எலும்புகள் இல்லாத இவற்றின் உடல் பெரும்பங்கு தண்ணீரால் ஆனது.

1950-களில் இந்தியாவிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பயிற்சி பெற்ற பணியாளர்களின் பற்றாக் குறைக்கு தீர்வு காண இந்திய திட்டக்குழு கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டபிள்யூ. 

ராபின்ஸ் என்பவரை நியமித்தது. இவரது அறிக்கையின் அடிப்படையிலேயே இந்தியன் இன்ஸ்டி டியூட் ஆஃப் டெக்னாலஜி எனும் ஐ.ஐ.டி.க்கள் ஏற்படுத்தப் பட்டன.

ஹவாயில் 1958ம் ஆண்டிலிருந்து Manua Loa வானிலை ஆய்வுக்கூடத்தில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அளக்கப்பட்டு வருகிறது. இதற்கு Keeling Curve என்று பெயர்.
உங்கள் தகவல் படியுங்கள் பகிருங்கள் !
1973ல் பாகிஸ்தான் ரயில்வே அணிக்காக ரன் எதுவும் எடுக்காமல், விக்கெட் எதையும் வீழ்த்தாமல், கேட்ச் எதையும் பிடிக்காமல் கிரிக்கெட் விளையாடிய நவாஸ் ஷெரீப் 1990-களில் பாகிஸ்தான் பிரதமர் ஆனார். 

நவாப் ஷெரீப் விளையாடிய ஒரே ஒரு முதல் வகுப்பு கிரிக்கெட் பந்தயம் இது தான். 

சார்லஸ் நேப்பியர் என்ற ஆங்கிலேயர் சிந்து மாகாணத்தைக் கைப்பற்றியதும் ‘பெக்காவி’ என்ற லத்தீன் மொழி வாக்கியத்தைச் சொன்னார். 

இதற்கு நான் பாவம் செய்துவிட்டேன் என்று பொருளாகும். சிந்து வைக் கைப்பற்ற வேண்டாம் என மேலிடத்திலிருந்து வந்த உத்தரவை மீறியதால் இவர் இவ்விதம் சொன்னார்.

லாலா அமர்நாத் சுதந்திர இந்தியாவின் முதல் கிரிக்கெட் கேப்டன் ஆவார். இவர் தனது முதலாவது டெஸ்ட் பந்தயத்திலேயே சதம் அடித்தவர். 

சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த அதே தேதி அதே மாதத்திலேயே விளையாட்டிலிருந்து விலகிக் கொண்ட ஒரே வீரர் இவர்தான்.
உலகின் மிகப் பாதுகாப்பான பத்து நகரங்கள்:

1. டோக்கியோ (ஜப்பான்),

2. சிங்கப்பூர், 3. ஒஸாகா (ஜப்பான்),

4. ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்),

5. ஆம்ஸ்டர்டாம் (நெதர்லாந்து), 

6. சிட்னி (ஆஸ்திரேலியா), 

7. ஜூரிச் (சுவிட்சர்லாந்து), 

8. டொரன்டோ (கனடா),

9. மெல்பர்ன் (ஆஸ்திரேலியா),

10. நியூயார்க் (அமெரிக்கா).
இணையதள பயன்பாட்டின் வேகத்தில் உலகில் இந்தியா 116-வது இடத்தைப் பெற்றுள்ளது. 

இந்தியாவின் சராசரி இணையதள பயன்பாட்டு வேகம் 2.0 Mbps (Mega Bite Per Second) ஆகும். தென்கொரியா 22.2 Mbps வேகத்தில் முதலிடத்தில் உள்ளது.
Tags:
Privacy and cookie settings