காலையில எழுந்திரிச்சதுமே கடலைப் பார்க்கிற மாதிரி வீட்டை வாங்கணும்னு பல பேருக்குக் கனவு இருக்கும். 
பறக்கும் தட்டு போன்ற வடிவத்தில் கடலில் மிதக்கும் வீடுகள் !
எதுக்குச் சிரமம்? இப்போ வெல்லாம் கல்லைக்கட்டி கடல்ல இறக்குற மாதிரி உங்க வீட்டையே கடல்ல இறக்கி விட்டு மிதக்கலாம். இதோ, வந்து விட்டது ‘யுஎஃப்ஓ வீடுகள்!’. 

இத்தாலியைச் சேர்ந்த ‘ஜெட் கேப்ஸ்யூல்’ நிறுவனம் உருவாக்கியிருக்கும் இந்த வீடுகள், 
பறக்கும் தட்டுகளைப் போன்ற வடிவத்தில் இருப்பதால் இந்தப் பெயர். ஆனால், வானத்தில் வட்டமிட முடியாது. கடல் அழகை ரசித்துக்கொண்டே மெள்ள மெள்ள மிதந்து வரலாம்.

ஏனெனில், இது மணிக்கு 6.5 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் வசதியைக் கொண்டது. கடலில் வாழ்ந்து கொண்டே, உலகைச் சுற்றி வருவதுதான் யுஎஃப்ஓ வீடுகளை உருவாக்கியதன் நோக்கம்! 
பறக்கும் தட்டு போன்ற வடிவத்தில் கடலில் மிதக்கும் வீடுகள் !
கிட்டத்தட்ட 400 சதுர அடி அகலத்தில் வியாழன் கிரக வடிவத்தில் இருக்கும் இந்த வீடுகளில் வேலைகளைக் கவனிக்க ஒரு இடம், குளிக்க, சமைக்க ஒரு இடம். 

கடலை ரசிக்கவும் ஒரு இடம் என எல்லாம் இருக்கு. நல்லாவும் இருக்கு!

அதிகபட்சம் மூன்று பேர் வசிக்கும் வகையில் உருவாக்கப் பட்டிருக்கும் இந்த வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை சோலார் பேனல் மூலமாக, சூரியனிடம் இருந்தும் பெறலாம்.

இட்லி மாவு ஒரு வாரத்திற்கு மேல் புளிக்காமல் இருக்க என்ன செய்ய வெண்டும்?

காற்றாலைகள் மூலம் காற்று, கடல் தண்ணீரில் இருந்தும் பெறலாம். 

தவிர கடல்நீரை, மழைநீரைக் குடிநீராக மாற்றும் வசதி, காய்கறிகளைப் பயிரிடத் தேவையான தோட்டம்... என நடுக்கடலில் உயிர்வாழத் தேவையான அத்தனை வசதிகளும் இருக்கின்றன. 

காலையில் எழுந்திரிச்சதும் ‘சைக்கிளிங்’ போகணும்னு ஆசைப் பட்டாலும், அதுக்கு இருக்கு தனி ரோடு! 
பறக்கும் தட்டு போன்ற வடிவத்தில் கடலில் மிதக்கும் வீடுகள் !
குறைவான இடம், நிறைவான வசதிகள் என்ற ஐடியாவோடு உருவாக்கப் பட்டுள்ள இந்த வீட்டின் தோராயமான மதிப்பு 2 லட்சம் அமெரிக்க டாலர்கள்.

அதாவது, ஒரு கோடியே முப்பத்து மூணு லட்சத்துக்குச் சொச்சம் ரூபாய்!