மின்னக்கூடிய ஒன்பது நவரத்தினக் கற்கள் உருவாகும் விதம் !

சுவனத்து இன்பங்களை வர்ணிக்கும் போது திருமறையின் பல இடங்களிலும் நபிகளாரின் பல பொன் மொழிகளிலும் 
மின்னக்கூடிய ஒன்பது நவரத்தினக் கற்கள் உருவாகும் விதம் !
தவறாமல் குறிப்பிடப்பட்டிருப்பவை தான் முத்து, மாணிக்கம், மரகம் போன்ற இரத்தினக் கற்கள். 

இவ்வுலகில் இரத்தினக் கற்களுக்குப் பெருவாரியான மதிப்பும் பெருமதியும் இருப்பதனால் இன்றும் விலை மதிப்பில்லாமல் இருக்கிறது.
இது போன்ற பண் மடங்கு மதிப்புள்ள இரத்தினக் கற்களை வழங்குவதாக வாக்களிக்கின்றான். 

இத்தொடரில் மதிப்பு வாய்ந்த ஒன்பது ரத்தினங்கள் (நவரத்தினங்கள்) பற்றிப் பார்ப்போம்.

அறிமுகம்

இரத்தினக் கற்களை இவ்வளவு தான் என்று வரையறுத்துக் கூறுவது கடினம். 

எண்ணிலடங்காத சாதாரண பெறுமதியுள்ள கற்கள் முதல் விலை மதிக்கவே முடியாதளவு பெறுமதி வாய்ந்த கற்கள் வரை நிறைந்து காணப்படுகின்றன. 

நவரத்தினங்கள் என்பது அனைவராலும் அறியப்படுகின்ற, பிரபலமான ஒன்பது ரத்தினக்கல் வகையாகும். 

முத்து, வைரம், வைடுரியம், மாணிக்கம், மரகம், புஷ்பராகம், நீலம், பவளம், கோமேதகம் என்பன பொதுவாக நாம் அனைவரும் அதிகமாக அறிந்து வைத்துள்ள கற்கள் தான். 

இவை உலகில் குறிப்பாக தென் ஆபிரிக்க நாடுகளிலும், இலங்கை, இந்தியாவிலும் வெகுவாகக் கிடைக்கின்றன. 
பல்வேறு மத நம்பிக்கைகளின் அடிப்படையில் இந்த ஒன்பது இரத்தினங்களும் உபயோகிக்கப்படுகின்றன. அதில் மூட நம்பிக்கைகளும் அதிகம்.

1. முத்து (Pearl)

அரபு மொழியில் லுஃலுஃ (لؤلؤة) என அழைக்கப்படுகின்றது. கடலில் சிப்பிக்குள் உருவாகும் கெட்டியான ஒரு வெண்மை நிற உருண்டை வடிவிலான பொருளே முத்து எனப்படுகின்றது. 

உலகில் பட்டை தீட்டப்படாத, பட்டை தீட்ட வேண்டிய அவசியமே இல்லாத ஒரு இரத்தின வகை தான் முத்து. 
மின்னக்கூடிய ஒன்பது நவரத்தினக் கற்கள் உருவாகும் விதம் !
எல்லா இரத்தினங்களும் பட்டை தீட்டப்படும் பொழுது தான் நல்ல பொலிவினைப் பெறும். 

ஆனால் இயற்கையிலேயே நல்ல பொலிவுடன் கிடைப்பது முத்து ஒன்று தான். எனவே இதற்கு கேள்வியும் அதிகம்.

கடல் நீருடன் கலந்துள்ள தூசி துணிக்கைகள் சிப்பியின் உடலினுள் புகுகின்றன. 
அவை சிப்பியின் மெல்லுடலில் உராய்வை ஏற்படுத்தி வலியைத் தருவதால் அவற்றை வெளியேற்றும் செயற்பாட்டின் போதே முத்துக்கள் பிறக்கின்றன. 

சிப்பியினுள் செல்லும் துணிக்கைகளை உயிருள்ள அந்தச் சிப்பி தன் புறத்தோல் அடுக்கில் உள்ள எபிதலியம் என்னும் படலத்தால் நன்கு பொதி செய்கின்றது.

இப்படர்க்கை ஆர்கனைட் அல்லது கல்சைட் போன்ற படிக வடிவிலுள்ள கால்சியம் கார்பனேட்டையும், 

கொன்சியோலின் எனப்படும் ஒரு வகைப் பசை போன்ற கரிம வேதிப்பொருள் ஒன்றையும் நீரையும் கொண்ட கலவையாகும். 

நேக்கர் (nacre) அழைக்கப்படும் இப்பொருள் நாளடைவில் படலங்களாக நிறைந்து மெல்லிய அடுக்குகளாக துணிக்கைகளின் மீது படிந்து இறுதியில் கடினமான முத்தாக மாறுகிறது.

முத்து உருவாகும் போது மெல்லிய வேதிப்பொருள் படர்க்கைகள் பல அடுக்குகளாகப் பதிவதனால் அது ஒளியை உட்பிரவேசிக்கவும் பிரதிபலிக்கவும் ஏற்ற தன்மையுடையதாகக் காணப்படுகின்றது. 

இதனால் சாதாரண முத்துக்கள் கூட பார்ப்பதற்கு மிகவும் ஒளிர்வுடையதாகத் தோன்றுகின்றன. 
நல்ல முத்தை மேல் நோக்கி உற்று பார்க்கும் போதே வானவில்லைப் போல ஏழு நிறங்கள் தெரியும். கடலிலிருந்து முத்து எடுப்பதை முத்துக் குளித்தல் என்று அழைப்போம். 
மின்னக்கூடிய ஒன்பது நவரத்தினக் கற்கள் உருவாகும் விதம் !
அலங்காரத்திற்காக முத்துக்களை மோதிரமாகவும், கழுத்தில் அணியும் மாலைகளாகவும், காதில் அணியும் கம்மல்களாகவும் ,

தங்கம் அல்லது வெள்ளி ஆபரணங்களிலும் தளபாடங்களிலும் முத்துக்கள் பதித்து விற்பனை செய்யப்படுகின்றன.

2. வைரம் (Diamond)

வைரம் (Diamond) (அரபு மொழியில் அல்மாஸ் - الماس) என்பது பளிங்கு நிலையில் உள்ள ஒன்றாகும். நிலத்திலிருந்து 

அகழும் போது சாதாரண நிலையில் உள்ள வைரம் பட்டை தீட்டப்பட்டதும் அழகு பெறுகிறது. 

அதன் மேல் படும் ஒளியை நாளா புறமும் சிதறச் செய்து கண்களுக்குக் கவர்ச்சியைத் தருகின்றது. 
எனவே இவை விலைமதிப்பு வாய்ந்தனவாக பயன்படுத்தப் படுகின்றன. நகை ஆபரணங்களில் வைரக் கற்கள் மிகையாகப் பயன்படுத்தப்படுகின்றன. 

வைரத்தின் பிரகாசம், நிறம், இடை என்பவற்றை வைத்தே விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தமிழில் வயிரம் என்றால் உறுதியானது என்று பொருள். 

அந்த சொல்லிலிருந்து தான் இதற்கும் வைரம் என்ற பெயர் வந்துள்ளது. 

காரணம் இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் அனைத்திலும் மிக உறுதி நிறைந்த பொருள் வைரம் என்பதனாலாகும். 
மின்னக்கூடிய ஒன்பது நவரத்தினக் கற்கள் உருவாகும் விதம் !
ஒரு பொருளின் உறுதியை, கடினத் தன்மையை அளக்கும் அளவீட்டு முறையாகிய மோவின் அளவுகோல் (Moh’s scale of mineral hardness) முறையில் வைரத்தின் உறுதி எண் 10 ஆகக்கொள்ளப்படுகின்றது. 

அவ்வளவு வலிமை வாய்ந்த்துதான் வைரம். “வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்” என்பார்கள். 
காரணம் அதன் அதிக கடினத்தன்மை தான். கண்ணாடித் தொழிற்சாலைகளில் கண்ணாடிகளை வெட்ட வைரம் பதித்த கீறும் கருவி பரவலாகப் பயன்படுகின்றது. 

பெரும்பாலும் செயற்கை முறையில் தயாரிக்கப்படும் வைரகங்களே தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. 

ஆபிரிக்கக் கண்டத்தின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளிலேயே வைரம் பெருமளவில் காணப்படுகின்றது. 

கனடா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் வைரம் கிடைக்கிறது. 

ஆண்டு தோறும் ஏறத்தாழ 130 மில்லியன் காரட் (26,000 கிலோ கிராம்) வைரம் அகழந்தெடுக்கப்படுவதாக ஒரு கணிப்பீடு சுட்டுகிறது.

3.வைடூரியம் (Lapis lazuli / Cat's eye)

அரபு மொழியில் அல்லஸுரத் (اللازورد) என அழைக்கப்படும் வைடூரியம் லேசான பச்சையும், பழுப்பு நிறமும் கொண்டதாகும். 

இந்த இரண்டு நிறமும் ஒரே கல்லில் காணப்படுவதோடு நடுவே ஒரு வெண்மை நிறத்தில் கோடு போன்ற அமைப்பும் காணப்படுகிறது. 
இதை மேலும் கீழும் அசைத்தால் பூனையின் கண்ணைப் போன்று தோற்றமளிக்கும். இதனால் தான் வைடூரியத்திற்கு கேட்ஸ் அய் (cat's eye) என்ற ஆங்கிளப் பெயர் வந்தது.
மின்னக்கூடிய ஒன்பது நவரத்தினக் கற்கள் உருவாகும் விதம் !
மஞ்சள் நிற பிரகாசமும் வெண்ணிறகற்றையும் உடையதே மிக உயர்ந்த வகை வைடூரியமாகும். 

பெரிலியம் அலுமினேட் எனப்படும் வேதிப்பொருளால் ஆன வைடூரியம், கிரிஸோபெரில் வகையை சார்ந்ததாகும். 

விலையும் அதிகமாகும். இதிலும் பல வகைகள் உண்டு. 

பழுப்பு நிறம் உடைய நூல் போன்ற அமைப்பு கொண்ட கற்களை டைகர்ஸ் ஐ (Tiger’s eye) என்றும், கருப்பு நிறமாக இருந்தால் புல்ஸ் ஐ (Bull’s eye) என்றும் அழைக்கின்றனர். 
வைடூரியங்கள் எமது நாட்டிலும் அண்டை நாடான இந்தியாவிலும் மற்றும் ஒரிஸ்ஸா, பிரேசில், அமெரிக்கா முதலிய இடங்களிலும் வைடூரியம் தாராளமாகக் கிடைக்கின்றது.

4. மாணிக்கம் (Ruby)

இரத்தினக் கற்களின் ராஜா எனப்படும் மாணிக்கம் சிவப்பு மற்றும், இளஞ்சிவப்பு நிறங்களில் உள்ள ஒருவகைப் படிகக்கல்லாகும். 

இது ஆங்கிலத்தில் Ruby என்றும் அரபு மொழியில் யாகூத் (ياقوت) என்றும் அழைக்கப்படுகின்றது. 

இது corundum குடும்பத்தில் உள்ள ஒரு வகையாகும். இரத்தினக் கற்களில் மாணிக்கம் தான் விலைமதிப்புக் கூடியது. 
அத்தோடு கிடைப்பதும் மிக அரிது. உலக நாடுகளில் மடகஸ்கார், மொஸாம்பிக் போன்ற நாடுகள் மாணிக்கக் கல்லிற்குப் பேர்போன நாடுகளாகும். 
மின்னக்கூடிய ஒன்பது நவரத்தினக் கற்கள் உருவாகும் விதம் !
இலங்கையிலும் மாணிக்க்க் கல் கிடைக்கின்றது. அதில் இரத்தினபுரி முதலிடம். 

இலங்கையில் மாணிக்ககல் வியாபாரத்திற்கு பேர் போன இடங்களாக இரத்தினபுரி, பேருவலை போன்ற இடங்கள் காணப்படுகின்றன. 

எமது நாட்டில் மாணிக்க கங்கை என்றொரு கங்கையே இருப்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

மண்ணிலிருந்து மாணிக்கக் கல்லை எடுக்கும்போது அவை பளபளப்பின்றியே காணப்படும். 

அவற்றை எடுத்து பட்டை தீட்டும் போது தான் அழகும், பளபளப்பும், விலைமதிப்பும் கூடுகின்றது. 

பட்டை தீட்டப்பட்ட மாணிக்கத்தில் ஒளி பாய்ச்சிப் பார்த்தால் அதில் நூல் போன்ற அமைப்பில் ஆறு கீற்றுகள் உடைய நட்சத்திர வடிவம் இருப்பதைக் காணலாம். 

இவை நட்சத்திர மாணிக்கம் (Star Ruby) என அழைக்கப்படுகின்றன. இவை விலை மதிப்புக் கூடியவை.

5. மரகதம் (Emerald)

மரகதக் கல்லின் ஆங்கிலப் பெயர் எமரல்ட். அரபு மொழியில் இது தும்ருத் (زمرد) எனப்படுகின்றது. 

ஒளி ஊடுருவக்கூடிய இளம் பச்சை நிறமுடைய இக்கல் பெரில் (Beryl) எனப்படும் குடும்பத்தைச் சேர்ந்தது. 

இது பெரில்லீயம், அலுமினியம், சிலிகேட் (Be3Al2(SiO3)6) என்ற மூலப் பொருள்களால் ஆனது. 

மரகதம் அடர்த்தி குறைவானதாகவும் எடை இலேசானதாகவும் இருப்பதால் இலகுவில் நொருங்கும் தன்மை கொண்டது. 
மின்னக்கூடிய ஒன்பது நவரத்தினக் கற்கள் உருவாகும் விதம் !
எனவே மிகக் கவனமாக உபயோகிக்க வேண்டும். குரோமியம் என்ற பொருள் சேர்ந்திருந்தால் தான் அது மரகம் எனப்படும் அது இல்லையேல் வெறும் பச்சை நிற பெரில் என்றே அழைக்கப்படுகிறது. 

பச்சை நிற பெரில்லை போதுமான அளவில் வெப்பமேற்றினால் அது எக்குவா மெரின் எனும் நீலபச்சை நிறக் கல்லாக மாறுகிறது. 

இரத்தினக்கல் வியாபார உலகில் இது அங்கீகாரத்திற்குட் பட்டதாகும். தரம் வாய்ந்த மரகதம் கொலம்பியா நாட்டில் கிடைக்கின்றது. 

இங்கு கிடைக்கும் கல்லில் குரோமியம் செரிந்து காணப்படுவதால் தரத்திலும் நிறத்திலும் உயர்ந்து விளங்குகின்றது. 

பிரேசில், எகிப்து, இந்தியா ஆகிய இடங்களிலும் இக்கட்கள் கிடைக்கின்றன.
6. புஷ்பராகம் (Topaz)

அரபு மொழியில் துபாஸ் (توباز) என அழைக்கப்படும் புஷ்பராகம் ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட ரத்தினக் கல்லாகும். 

இதுவும் மாணிக்கம் போன்றே கோரண்டம் குடும்பத்தைச் சேர்ந்தது. சாதாரண புஷ்ப ராகம் நிறமில்லாமல் தான் கிடைக்கும் 

ஆனால் அதனுடன் சேரும் தாதுப் பொருளே கல்லுக்கு நிறத்தைக் கொடுக்கிறது.

சிவப்பு நிறம் தரும் தாதுப் பொருள் சேர்ந்தால் அது மாணிக்கமாகவும், நீலநிறம் சேர்ந்தால் நீலக் கல்லாகவும், மஞ்சள் நிற தாதுப் பொருள்கள் சேர்ந்தால் கனக புஷ்பராகம் எனவும், 
மின்னக்கூடிய ஒன்பது நவரத்தினக் கற்கள் உருவாகும் விதம் !
நிறம் எதுவுமே சேராமலிருந்தால் வெண்புஷ்பராகம் எனவும் அழைக்கப்படுகிறது. கனகம் என்ற சொல்லுக்குத் தங்கம் என்று பொருள். தங்கம் மஞ்சள் நிறமுடையது.

இதனால் தான் தங்க நிறமுடைய புஷ்ப ராகம் கனக புஷ்பராகம் என்று அழைக்கப்படுகின்றது. 

இது பிரகாசம் மிக்கது. விலையும் அதிகம். புஷ்பராகக் கற்கள் எமது நாட்டிலும் இந்தியாவில், அவுஸ்த்திரேலியா போன்ற நாடுகளிலும் கிடைக்கின்றன.

7. நீலமாணிக்கம் (Sapphire)

நீலம் அலுமினியம் டிரை ஆக்ஸைடு என்ற மூலப்பொருளால் ஆனது. டைட்டேனியம் என்ற மூலக்கூறு இதனுடன் சேர்வதால் இது நீல நிறத்தைப் பெருகின்றது. 
மின்னக்கூடிய ஒன்பது நவரத்தினக் கற்கள் உருவாகும் விதம் !
ஆழ்ந்த நீல நிறமுள்ள நீலக்கல்லில் டைட்டானியம் அதிகம் இருக்கும். இதன் நிறத்தின் பெயரே கல்லின் பெயரானது. 

காஷ்மீர், தாய்லாந்து, இலங்கை, கென்யா, டான்சானியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. 

நீலம் கடினத்தன்மை அதிகமுடையதாக இருப்பதால் நீண்ட நாட்களுக்கு, பளபளப்பு குன்றாமல் இருக்கும்.
8. பவளம் (Coral)

இதும் நவரத்தினங்களில் ஒன்றாகும். பார்க்கப் பளபளப்புடன் காணப்படும். பவளம் அரபு மொழியில் மர்ஜான் (مرجان) எனப்படுகின்றது. 
மின்னக்கூடிய ஒன்பது நவரத்தினக் கற்கள் உருவாகும் விதம் !
இது கடல் வாழ் முதுகெலும்பற்ற உயிரின வகையைச் சேர்ந்ததாகும். பல கிளைகளைக் கொண்ட மரங்களை ஒத்திருக்கும் இவற்றைப் பவளக்கொடிகள் என்று அழைப்பர். 

கடல் நீரில் உள்ள பலவகையான உப்புகளைப் பிரித்தெடுத்துத் தங்கள் உடலில் சேமித்து வைத்துக் கொள்ளும் இயல்புடையவை. 

பவளம் கல்சியம் கார்பனேட்டினால் ஆனது. எனவே தான் இவை இவற்றின் இறப்புடன் சுண்ணாம்புக் கல்லாக மாறுகின்றன.
9. கோமேதகம் (Garnet / Hessonites)

அரபு மொழியில் அல்அகீக் (العقيق) என்றழைக்கப்படும் கோமேதகம் தேனீரின் அல்லது தேனின் நிறத்தில் காணப்படும். 

புகை படிந்த சிவப்பு ஒளி வீசும் நிறங்கொண்ட கோமேதகம் நல்ல நிறமும், ஒளி ஊடுவருவக் கூடிய தன்மையும் கொண்டதாகும். 
மின்னக்கூடிய ஒன்பது நவரத்தினக் கற்கள் உருவாகும் விதம் !
கோமேதகம் கார்னெட் வகையைச் சார்ந்தது. பழங்கால தமிழ் நூல்களில் கோமேதகம் கோமூத்திரம் என்று கூறப்பட்டுள்ளது. 

பசுவின் சிறுநீர் நிறத்தில் உள்ள கல் என்பதாலேயே இதற்கு கோமூத்திரம் என்றும் கோமேதகம் என்றும் பெயரிட்டுள்ளனர். 

கல்லின் உள்ளே பார்க்கும் போது தேனில் காணப்படும் குமிழ்களைப் போல காணப்படுவது கோமேதகத்தின் சிறப்பு அம்சமாகும். 

கோமேதகக் கல்லானது இந்தியா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் கிடைக்கிறது.
Tags:
Privacy and cookie settings