ஹெல்மெட் அணிந்து அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் !

கிருஷ்ணகிரி அருகே அரசுப் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்ததால், ஓட்டுநர் ஹெல்மெட் அணிந்து பேருந்தை பாதுகாப்பாக ஓட்டிச் சென்றார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 
கிருஷ்ணகிரிக்கு தமிழ்நாடு அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தை பொன்வேல் (50) ஓட்டிச் சென்றார். நடத்துநர் உட்பட 40-க்கும் மேற் பட்ட பயணிகள் பேருந்தில் இருந்த னர்.

இந்நிலையில், ஓசூர் - கிருஷ்ண கிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் நேற்று பகல் 12 மணியளவில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது.

இதில், ஓட்டுநர் பொன்வேலுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது.

பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்திய பொன்வேலு, சிறிது நேரம் கழித்து மீண்டும் பேருந்தை இயக்கினார். அப்போது, முன்பக்க கண்ணாடி இல்லாததால், மண், தூசி ஆகியவை பறந்து வந்து ஓட்டுநரின் கண்களில் விழுந்தன. 

இதனால், அவர் மிகுந்த சிரமத்துடன் பேருந்தை ஓட்டினார். இதைப் பார்த்த பயணி ஒருவர், தான் வைத்திருந்த ஹெல்மெட்டை அணிந்து பேருந்தை ஓட்டுமாறு ஓட்டுநரிடம் கேட்டுக் கொண்டார். 

இதை அடுத்து ஓட்டுநர் பொன்வேல் ஹெல்மெட் அணிந்துகொண்டு பேருந்தை கிருஷ்ணகிரிக்கு ஓட்டிச் சென்றார்.

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்ததால், கண்ணில் தூசு விழாமல் இருக்க ஹெல்மெட் அணிந்து ஓட்டுநர் பேருந்தை ஓட்டிச் சென்றார்.
Tags:
Privacy and cookie settings