கர்ப்பிணியைத் தாக்கிய போலீஸ்.. கொடுமை !

சென்னைத் திருவல்லிக்கேணி அரசு மருத்துவ மனையில் நிறைமாத கரப்பிணியை போலீசார் தாக்கியதால், பனிக்குடம் உடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தையைப் பெற்றெடுத்தார். 
 திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த தமிழரசுவின் மனைவி முத்தாம்பிகை (31). திருப்பதியில் உள்ள சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து வந்தார். 

அங்கேயே தமிழரசும் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இருவருக்கும் திருமணம் முடிந்து முதல் குழந்தையும் பிறந்துள்ளது.

இந்த நிலையில் முத்தாம்பிகை மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். இதனால் பிரசவத்துக்காக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நேற்று(சனி) மதியம் 12 மணியளவில் மனைவி முத்தாம்பிகை அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்கு வெளியே தமிழரசு அமர்ந் திருந்தார். அப்போது அவருடன் இருந்த முதல் குழந்தை குழந்தை விடாமல் அழுதுள்ளது. 

அந்த சமயத்தில் அங்கு, பாதுகாப்புக்கு இருந்த பெண் போலீசார், 'குழந்தையை வெளியே தூக்கிச் சென்றுவிடு’ என்று கூறியுள்ளனர். அதற்கு தமிழரசு, குழந்தை அழுகையை நிறுத்த மாட்டேன் என்கிறது என பதில் அளித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த பெண் போலீஸார், போலீஸையே எதிர்த்து பேசுவதாக கூறி தமிழரசுவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அடிக்கவும் செய்துள்ளனர். இதனை பார்த்து வார்டில் இருந்து வெளியே வந்த முத்தாம்பிகை, போலீசாரைத் தடுத்துள்ளார். 

அப்போது ஆத்திரமடைந்த 3 பெண் போலீஸாரும் நிறைமாத கர்ப்பிணி என்றும் பார்க்காமல் முத்தாம்பிகை மற்றும் அவரது கணவர் தமிழரசுவை சராமரியாகத் தாக்கியுள்ளனர்.

மேலும் முத்தாம்பிகையின் வயிற்றில் காலால் எட்டி உதைத்தனர். மருத்துவ மனையில் உள்ள காவல் நிலையத்துக்கு இருவரையும் கொண்டு சென்று அங்கிருந்த ஆண் போலீசாருடன் சேர்ந்த அடித்து துன்புறுத்தியுள்னர். 

சம்பவம் பற்றி மருத்துவ மனையில் இருந்தவர்கள் திருவல்லிக்கேணி உதவி ஆணையர் முத்து வேல்பாண்டிக்கு தகவல் அளித்தனர். அவர் மருத்துவ மனைக்கு விரைந்து வந்தார்.

மருத்துவமனை வளாகத்தில் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியின் காலில் விழுந்த முத்தாம்பிகையும், தமிழரசும், “நாங்கள் ஒரு தவறும் செய்யவில்லை. 

எங்களை அடித்து துன்புறுத்தி கஞ்சா உள்ளிட்ட பொய் வழக்குகளை போட்டு கைது செய்யப் போவதாக மிரட்டுகின்றனர். எங்களை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்” எனக் கூறி கதறினர்.

அவர்களை சமாதானப் படுத்திய முத்துவேல்பாண்டியிடம் இங்கு சிகிச்சைப் பெறவே பயமாக இருக்கிறது. நாங்கள் ஊருக்கே செல்கிறோம்” எனவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து தமிழரசு, மனைவி முத்தாம்பிகையை அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் இருந்து கிளம்பி செய்யாறு செல்ல முடி வெடுத்துள்ளனர். பின்னர் பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது, 

போரூர் அருகே பனிக்குடம் உடைந்து முத்தாம்பிகை வலியால் துடித்தார். உடனடியாக பயணிகள், ஆம்புலன்சில் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

மனிதாபி மானமற்ற முறையில் சட்டம் பயின்று வரும் மாணவியை அவர் கர்ப்பிணி என்றும் பாராமல், தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மருத்துவ மனையில் திரண்டிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
Tags:
Privacy and cookie settings