ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியான சல்மான் கானின் சுல்தான் படம், 5 நாள்களில் ரூ. 300 கோடி வசூலித்து சாதனை செய்துள்ளது. கடந்த புதன் கிழைமை வெளியானது சுல்தான்.
பிரமாத மான வசூலுடன் தொடங்கிய இந்தப் படம் இந்தியாவில் மட்டும் முதல் வார முடிவில் ரூ. 252 கோடி வசூலித்துள்ளது. வெளிநாட்டில் ரூ. 92 கோடி வசூலித் துள்ளது.
5 நாட்களில் மொத்த வசூலாக ரூ. 344 கோடியைப் பெற்றுள்ளது சுல்தான். சல்மான்கான் படங்களில் மட்டு மில்லாமல் வேறெந்த பாலிவுட் படமும் முதல் 5 நாள்களில் இந்த ளவுக்கு வசூல் செய்தது இல்லை.
ரூ. 100 கோடி வசூலைத் தொட்ட பாலிவுட் நடிகர்களில் முதலிடத்தில் உள்ளார் சல்மான்கான். மற்ற நடிகர்களை விடவும் அவருடைய படங்கள் தான் அதிக முறை அதாவது 11 முறை ரூ. 100 கோடி வசூலைத் தாண்டியுள்ளன.
அடுத்த இடத்தில் உள்ளார் ஷாருக்கான். இவர் படங்கள் 6 முறை ரூ 100 கோடி வசூலைத் தாண்டியுள்ளன.