இடுப்பு வலி வருவது ஏன்? எதற்கு?

பொதுவாக நாம் அனைவரும் அன்றாடம் தலைவலி, இடுப்பு வலி, கழுத்து வலி, முதுகுவலி போன்ற ஏதாவது ஒரு வலியால் பாதிக்கப்பட்டுத் தான் இருக்கிறோம். 
இடுப்பு வலி வருவது ஏன்? எதற்கு?
இதற்கு தனிப்பட்ட பல காரணங்கள் இருப்பினும் இந்த வலிகளில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பது தான் உண்மை. இரண்டு எலும்புகள் சேர்ந்து ஒரு மூட்டை உருவாக்குகின்றன.

அந்த மூட்டுக்குள் நரம்புகள், ரத்தக் குழாய்கள், திரவங்கள் என்று பல மாதிரியான அமைப்புகள் உடலில் இடத்திற்கு இடம் மாறுபட்டு அமைந்துள்ளது.
பெரும் பாலானோர் அன்றாடம் பாதிக்கப் படுவது முதுகு வலியால் தான். நாம் நேராக நிமிர்ந்து நடக்க, நிற்க உதவுபவை முதுகுத் தண்டும் அது சார்ந்த எலும்பு களும் தான்.

அதனூடே தான் மூளை தொடர்பான தண்டுவடம் சென்று அத்தனை உறுப்பு களிலிருந்து வரும் தகவல்களை மூளைக்கு கொண்டு செல்ல பயன்படுகிறது. 

இந்த தண்டு வடத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கும் எலும்புகள் மொத்தம் 32.

இந்த எலும்புகளுக்கு இடையே தட்டுக்களும் அதில் ஈரத் தன் மையுடனான சவ்வுகளும் இருப்பதால்,  நாம் அசைகையில், குதிக்கும் போது, 

இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது, ஆட்டோவில் செல்லும் போது என குதிகாலில் அதிர்வுகள் ஏற்படாது இருக்க உதவுகிறது.

காரணங்கள்

குண்டு – குழியான பாதையில் இரு சக்கர வாகனத்தில் அடிக்கடி வெகுதூரம் பயணிப்பது, இருக்கையில் நேராக சரியான நிலையில் உட்காராமல் இருப்பது, 

முறையற்ற உடற் பயிற்சி, அல்லது உடற் பயிற்சியே இல்லாமை, எலும்புகளில் ஏற்படும் சுண்ணாம்புக் குறைவு.

ருசியான பனீர் கேஷ்யூ கிரேவி செய்வது எப்படி?

சரியாக குணப்படுத்தப்படாத வாயுக் கோளாறு,

முதுமை ஆகியவை காரணமாக இந்தத் தட்டுக்கள் பாதிக்கப்பட்டு கழுத்து, இடுப்பில் வலி ஏற்படும். இடுப்பு, கழுத்து தலைப் பகுதிகளில் தீவிர வலி, தசைகளில் இறு க்கம் ஏற்படும். 
இடுப்பு வலி வருவது ஏன்? எதற்கு?
இவற்றுடன் இடு ப்பு எலும்புத் தேய்வு, காரண மாக பிட்டம், பின்னங்கால் தொடைப் பகுதிகளில் வலி ஏற்படக் கூடும். 

காலை உயர்த்தும் போது வலி கூடும்.  கழுத்து எலும்பு தேய்மானம் அடையும் நிலையில் கைகளில் வலியும், உள்ளங்கையில் மரத்துப் போன உணர்வும்,

சில நேரங்களில் எறும்பு ஊறுவது போன்றும், எரிச்சல் போன்றும் வலி ஏற்படும். தட்டு நகர்வின் அளவு திசை மற்றும் எந்தப் பகுதி தட்டுக்கள் பாதித்துள்ளன என்பதைப் பொருத்து வலியும் வேதனையும் மாறுபடும்.

நோயாளியைப் பரிசோதனை செய்வது, எக்ஸ்ரே படம் ஆகியவை மூலம் பாதிப்பைத் துல்லி யமாகக் கணிக்க முடியும். 
கட்டுப்பாடின்றி சிறுநீர் கழித்தல், உணர்வு மாற்றம் அதிகம் இருப்பின் சி.டி.ஸ்கேன், எம். ஆர் .ஐ.ஸ்கேன் பரி சோதனைகள் தேவைப்படலாம்.

உணவு, உடற்பயிற்சி, உள்மருந்து, புறமருந்து என சித்த மருத்துவத்தில் கூட்டு சிகிச்சை மூலம் இடுப்பு, கழுத்து வலி, தட்டு பிறழ்தல் பிரச்சினையை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியும்.

தவிர்க்கவேண்டியவை

உருளைக் கிழங்கு, பட்டாணி, காராமணி, வாழைக்காய், அதிக புளி, குளிர் பானங்கள் ஆகியவற்றை இந்த நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும். 

குறிப்பாக வாயு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய உணவுப் பொருட்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.

தீர்வு

உணவில் முடக்கத்தான் கீரை, இஞ்சி, புதினா, பூண்டு போன்ற வாயு நீக்கும் உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். 

மருத்துவரின் ஆலோசனையுடன் கூடிய சரியான உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்கள் ஆகியவை

சில நேரங்களில் கழுத்து, இடுப்பு வலி பிரச்சினையை உள் மருந்துகள் இல்லாமலே குணப்படுத்தும் ஆற்றல் பெற்றவை. அதனால் இவற்றை செய்யலாம்.
இடுப்பு வலி வருவது ஏன்? எதற்கு?
சூரிய நமஸ்காரம், திரிகோணாசனம், வஜ்ராசனம், யோக முத்ரா, மகாமுத்ரா, சலபாசனம், தனுராசனம், புஜங்கா சனம், போன்ற ஆசனப் பயிற்சிகள் மருந்துகளுடன் சேர்ந்து நோயை விரைவில் குணப்படுத்திட உதவும்.

சித்த மருத்துவத் தில் இந்த நோயை தொக் கண சிகிச்சையான புற மருத் துவ முறையிலும், வர்ம உள் மருந்துகளாலும் குணப்படு த்த முடியும்.
கழுத்து, இடுப்பு, முதுகு எலும்பு வலி பிரச்சினை வந்து விட்டால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. 

சித்த மருத்துவம் அதன் பிரி வான தொக்கண மருத்துவம், வர்ம மருத்துவம் ஆகியவை மூலம் வலியை குறைத்து முழு நிவாரணத்தைப் பெறலாம்.
Tags:
Privacy and cookie settings