சீனாவில் கனமழை வாய்ப்பு.. மஞ்சள் எச்சரிக்கை !

சீனாவின் பெரும்பான்மையான பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மஞ்சள் எச்சரிக்கை அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.
குயிஸோயு, ஹூனன், ஹூபே மற்றும் யூன்னன் மாகாணங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் திங்கட்கிழமை காலை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 200 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு தேசிய வானியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

பொதுமக்கள் வெளியே அதிகம் நடமாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறும் வலியுறுத்தப் பட்டுள்ளது.

சீனாவின் இரண்டாவது பெரிய மழை எச்சரிக்கை குறியீடு மஞ்சள் ஆகும். ஆரஞ்சு, மஞ்சள், நீலம் மற்றும் சிகப்பு ஆகிய வரிசையில் மழை எச்சரிக்கை விடப்படும்.
Tags:
Privacy and cookie settings