யார் இந்த ஐ.எஸ். தீவிரவாதம் அமைப்­பினர்?

பயங்­க­ர­வா­தத்தைப் பயங்­க­ர­வா­தத்தால் ஒழிக்க முடி­யாது. ஒரு பயங்­க­ர­வா­தத்­துக்­கெ­தி­ரான இன்­னொரு பயங்­க­ர­வாதம், இரு தரப்பிலும் அழி­வு­களை மட்­டுமே பரி­சாகக் கொடுக்­கி­றது.
ஆனால், பயங்­க­ர­வா­தத்தில் ஈடு­ப­டு­ப­வர்கள் அதை உணர்­வ­தில்லை. அதை என்றோ உண­ரும்­போது காலங் கடந்­து­வி­டு­கி­றது. உண்மையில் பயங்­க­ர­வா­தத்­துக்­கெ­தி­ரான பயங்­க­ர­வாதம் மேலும் பயங்­க­ர­வா­தங்­க­ளுக்கு வித்­தி­டு­கி­றது.

அண்மைக் கால­மாக ஊட­கங்­களின் பர­ப­ரப்புச் செய்­தி­யாக ஐ.எஸ்.இயக்கம் பற்­றிய தக­வல்கள் வெளி­வந்­த­வண்­ண­முள்­ளன. 

இன்­றைய சமூக வலைத்­த­ளங்­களில் இவர்­க­ளது வீர­தீரச் செயல்கள் மட்­டு­மன்றி, இவர்­களால் நடத்­தப்­பட்­ட­தாகக் கூறப்­படும் கொடூரக் கொலைகளும் வெளி­வந்து மக்கள் குழப்­பத்­திற்­குள்­ளா­கி­யுள்­ளனர்.

சமீ­பத்தில் இலங்­கையில் கூட ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் செயற்­பா­டுகள் குறித்து தொடர்ச்­சி­யாக விசா­ர­ணைகள் இடம்­பெற்று வருவதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­னா­யக்க பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தார்.

இவ்­வா­றான பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வதைத் தடுக்கும் வகையில், அர­சாங்கம் முழு­மை­யாகக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வரு­வ­தாக சுட்­டிக்­காட்­டி­ய­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

யார் இந்த ஐ.எஸ். அமைப்­பினர்?

ஐ.எஸ். எனப்­படும் இந்த ஆயுதம் ஏந்­திய தீவி­ர­வாத இயக்கம் சிரியா, ஈராக், ஆபி­ரிக்கா, மத்­திய கிழக்­கா­சியா, தெற்­கா­சியா போன்ற பகுதி­களில் இயங்கி வரு­கி­றது. 

ஈரான் மற்றும் சிரியா பகு­தி­களை உள்­ள­டக்­கிய ஓர் இஸ்­லா­மிய ஆட்­சியை உரு­வாக்க வேண்டும் என்பது ஐ.எஸ். ஐ.எஸ் இன் கொள்கை.

ஸூன்னி முஸ்லிம் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளான ஐ.எஸ். இயக்கம் ஈராக் படை­யி­னரை வெற்­றி­கொண்டு ஈராக் மற்றும் சிரி­யாவின் எல்லைப் பகு­திகள் சில­வற்றை முழு­மை­யாகக் கைப்­பற்றி 

அதனை இஸ்­லா­மிய கலீபா ஆட்­சிக்­குட்­பட்ட ஒரு தனி­நா­டாக ஏனைய நாடு­களின் ஒப்­பு­த­லின்றி தாமா­கவே அறி­வித்­தி­ருந்­தது.

அத்­துடன், தனது பெய­ரையும் இஸ்­லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) எனவும் மாற்­றி­ய­மைத்­துக்­கொண்­டது. இத­னை­ய­டுத்து, உலகம் முழு­வதும் அதி­க­ளவில் பேசப்­படும் இயக்­க­மாக ஐ.எஸ். மாற்­ற­ம­டைந்­து­விட்­டது.

ஆனால், ஐ.எஸ். இயக்கம் என்­பது திடீ­ரென உரு­வா­ன­தொரு இயக்­க­மல்ல. 2000ஆம் ஆண்­டி­லி­ருந்து பல்­வே­று­பட்ட பெயர்­களில் இயங்கி வந்­தி­ருப்­ப­தற்­கான தக­வல்கள் உள்­ளன.

ஜமாஅத் அல் தவ்ஹீத் வல் ஜிஹாத் எனும் பெயரில் அபுல் முஸாப் அல் ஷர்­காவி எனும் இஸ்­லா­மிய கிளர்ச்­சி­யாளர் ஒரு­வ­ரினால் இந்த இயக்கம் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

இதில் உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு கிளர்ச்சி அமைப்­பினர் சிலரும் இணைந்­துள்­ளனர்.

தொடர்ந்து அல் கைதா துணை­யுடன் 2003ஆம் ஆண்­டி­லி­ருந்து ஈராக்கில் அல் கைதாவின் ஈராக்கின் இயக்கம் போல “அல் கைதா இன் ஈராக்” என்ற பெயரில் செயற்­பட ஆரம்­பித்­துள்­ளது.

அத்­துடன், முஜா­ஹிதீன் ஷூரா சபை என்ற பெய­ரிலும் செயற்­பட்டு தற்­போது ஐ.எஸ். என்ற வடி­வத்­தினை வந்­த­டைந்­துள்­ளது.

2014ஆம் ஆண்டின் ஆரம்ப பகு­தி­யி­லேயே அல் கைதா­வி­லி­ருந்து முற்­றாகப் பிரிந்த ஐ.எஸ். இயக்கம், அல் கைதா­வுடன் இணைந்திருந்த காலத்தில் ஈராக்­கி­லி­ருந்து அமெ­ரிக்­காவை வெளி­யேற்­றுதல், 

ஈராக்கில் கலீபா ஆட்­சியை ஏற்­ப­டுத்­துதல், ஈராக்கை தள­மா­கக்­கொண்டு ஏனைய நாடு­களை தாக்­குதல், இஸ்­ரேலைத் தாக்­குதல் என்ற இலக்­கு­க­ளுடன் செயற்­பட்­டி­ருந்­தது.

அல் கைதா­வு­ட­னான பிரி­வுக்கு பின்னர் முன்­னைய இலக்­கு­க­ளுடன் சேர்த்து, ஜோர்டான், இஸ்ரேல், பலஸ்­தீனம், லெபனான், குவைத், சைப்­பிரஸ் மற்றும் தெற்கு துருக்கி உள்­ளிட்ட 

பகு­தி­களைக் கைப்­பற்றி கலீபா (இஸ்­லா­மிய ஆட்­சி­யாளர்) ஆட்­சியை ஏற்­ப­டுத்­துதல், தமது ஆட்­சிக்­குட்­பட்ட எல்­லையில் ஷியா முஸ்­லிம்­களை அழித்தல் போன்ற இலக்­கு­க­ளையும் திட்­டங்­க­ளையும் விஸ்­த­ரித்­துள்­ளது ஐ.எஸ்.

அபூ­பக்கர் அல் பக்­தாதி

இந்­நி­லை­யி­லேயே, 2010ஆம் ஆண்டில் ஐ.எஸ். இயக்­கத்தின் தலைமைப் பொறுப்­பினை அபூ­பக்கர் அல் பக்­தாதி ஏற்றார்.

இவர் குறித்து ஏற்­க­னவே பல தக­வல்கள் வெளி­யாகி இருந்த போதிலும் மக்கள் முன்­னி­லையில் தோன்­றா­ம­லேயே இருந்தார். இதனால் பக்­தாதி கடந்த சில ஆண்­டு­க­ளுக்கு முன்பே இறந்­து­விட்­ட­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கின.

2011ஆம்­ ஆண்­ட­ளவில் பக்­தாதி குறித்த தக­வல்கள் வழங்­கினால் 130 கோடி ­ரூபா சன்­மானம் வழங்­கப்­படும் என்று அமெ­ரிக்­கா­வினால் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் பக்­தா­தியின் உருவம் தொடர்பில் மாறு­பட்ட கருத்­துகள் நில­வின.

இந்­நி­லையில் கடந்த மாதம் இஸ்­லா­மிய கலீ­பா­வான பின்னர் மக்கள் முன்­னி­லையில் முதல் தட­வை­யாக தோன்றி தனக்கு ஆதரவளிக்­கு­மாறு இஸ்­லா­மி­யர்­களைக் கேட்­டுக்­கொண்டு வதந்­தி­க­ளுக்­கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் பக்­தாதி.
1971ஆம் ஆண்டு பிறந்த பக்­தாதி ஈராக்கில் இஸ்­லா­மிய சட்டம் தொடர்பில் முது­மாணி பட்டம் பெற்­றவர் எனக் கூறப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

தன்­னைத்­தானே கலீபா இப்­றாஹிம் என அறி­வித்­துள்ள பக்­தாதி தலை­மை­யி­லான ஐ.எஸ். இயக்கம், தற்­போது முன்­னரை விட வேகமாக ஈராக்கின் பல பகு­தி­களை தாக்கி பக்­தாத்தை நோக்கி நகர ஆரம்­பித்­தது.

சுமார் 10 ஆயிரம் படை­வீ­ரர்­களை மட்­டுமே கொண்­டி­ருந்த ஐ.எஸ். இயக்கம் சமூக ஊட­கங்­களின் வழி­யாக கடந்த சில வரு­டங்­க­ளாக உல­க­ளவில் பெரும் ஆட்­ப­லத்தை சேர்த்து வரு­கி­றது.

இந்த வருடம் மட்டும் 20,000க்கும் மேற்­பட்­ட­வர்கள் உலகம் முழு­வ­திலும் இருந்து ஐ.எஸ். இல் இணைந்­துள்­ளனர் என கூறப்­ப­டு­கி­றது. அமெ­ரிக்கா, ஐரோப்பா, ஜேர்­மனி என 90 வெவ்­வேறு நாடு­களில் இருந்து ஆட்கள் இணைந்­துள்­ளனர்.

ஓரி­டத்­தி­லி­ருந்து ஒளிந்து கொண்டு அவ்­வப்­போது ஒரு தாக்­கு­தலை நிகழ்த்­து­கின்ற ஒரு இயக்­க­மாக ஐ.எஸ். செயற்­ப­ட­வில்லை. அரண்கள் அமைத்து ஒரு இடத்தில் மட்­டுப்­ப­டாமல் முன்­னேறும் வழி­க­ளி­லேயே தாக்­கு­த­லுக்­கான திட்­டங்­க­ளையும் பகிர்ந்­து­கொள்கின்­றது.

தொடர்ச்­சி­யான தாக்­கு­தல்­க­ளுடன் தனது இலக்­கினை நோக்கி ஐ.எஸ். நகர்ந்­து­கொண்டே இருக்­கி­றது. இதனால் தமது இருப்­பினை தக்க வைத்­துக்­ கொள்ள வேண்­டிய நிலைக்­ குள்­ளா­கி­யுள்ள 

ஈராக் அரசு ஐ.எஸ். இயக்­கத்தின் செயற்­பா­டு­களைக் கட்­டுப்­ப­டுத்த கடு­மை­யான பிர­யத்­த­னங்கள் எடுப்­பது போன்று அமெ­ரிக்­காவின் உத­வி­க­ளையும் எதிர்­பார்த்­துக்­கொண்டே இருக்­கின்­றது.

ஈராக் படையின் வான் வழித்­தாக்­கு­தல்­களின் பின்­ன­டைவே ஐ.எஸ். முன்­னேறக் கார­ண­மா­கின்­றது எனக் கூறு­கி­றது. 

ஈராக் அரசு, வான்வழித் தாக்­குதல் சாத­னங்­களை அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து பெற முயற்­சிக்­கின்ற போதிலும் அவை கிடைப்­பதில் தாமதம் ஏற்பட்டுள்ள­தாக ஈராக் ஜனா­தி­பதி மாலிக் அல் நூரி தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, ஐ.எஸ். இயக்­க­மா­னது அமெ­ரிக்­காவின் கைப்­பாவை எனவும் ஐ.எஸ். இன் செயற்­பா­டுகள் திட்­ட­மி­டப்­பட்­டவை எனவும் இணையத் தளங்­களில் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத தக­வல்கள் உல­வு­கின்­றன. 

ஷியா மற்றும் ஸூன்னி முஸ்­லிம்­க­ளி­டையே தீராப் பகையை உரு­வாக்­கு­வதே இவர்­களின் நோக்­கமாம்.

இதனை உறுதி செய்­வ­து­போல தன்­னிச்­சை­யாக போர் முடி­வு­களை எடுக்கும் அமெ­ரிக்­கா­வா­னது ஐ.எஸ். விட­யத்தில் ஈரானை, ஈராக்குக்கு உதவி செய்ய அழைக்­கின்­றது.

அதே­வேளை, தமது கட்­டுப்­பாட்டு பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள முஸ்­லிம்­களின் வர­லாற்று முக்­கி­ய­த்து­வ­மிக்க மத ஸ்தலங்­களை ஐ.எஸ். அழித்து வரு­கின்­றது. இது இஸ்­லா­மி­யர்­க­ளி­டையே பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இஸ்­லா­மி­யர்­களின் புனித இட­மான மக்­கா­வி­லுள்ள கஃபாவை தகர்க்­கவும் ஐ.எஸ். தீர்­மா­னித்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.

ஆனால், இஸ்­ரேலைக் குறி­வைத்தே ஐ.எஸ். இன் காய் நகர்த்தல் அமைந்­துள்­ள­தாக யூதர்­களின் ஊட­கங்கள் சில குறிப்­பி­டு­கின்­றன. ஏனெனில், மத்­திய ஆசிய வர­லாற்றில் ஜெரு­ச­லேமை நோக்­கிய நகர்­வுக்­காகவே அத்­தனை சண்­டை­களும் இடம்­பெற்­றுள்­ளன, இடம்­பெ­று­கின்­றன.

குறைந்­த­ள­வி­லான எண்­ணி­கை­யான படை­யி­னரை மட்­டுமே கொண்­டுள்ள ஐ.எஸ். இயக்­கத்­துக்கு இது பல­மாக அமைந்­துள்­ளது. இதுவே 30 ஆயிரம் பயிற்சி பெற்ற 

ஈராக் இரா­ணு­வத்­தினை மீறி 1.8 மில்­லியன் சனத்­தொகை கொண்ட ஈராக்கின் முக்­கிய நக­ரங்­களில் ஒன்­றான மொசூல் நகரை ஐ.எஸ். இயக்­கத்­தினால் கைப்­பற்ற முடிந்­த­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.

சமூ­க­வ­லைத்­த­ளங்­களை ஊட­க­மாக பயன்­ப­டுத்தும் தீவி­ர­வாதம்

ஐ.எஸ். இயக்கம் ஊட­கங்­களை சரி­யாக பயன்­ப­டுத்தி வரு­கி­றது. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்­டாக்ராம் போன்ற சமூக இணை­யங்­களில் இவர்கள் தீவி­ர­மாக செயற்­பட்டு வரு­கி­றார்கள்.

இதை பயன்­ப­டுத்தி தங்கள் கொள்­கைகள், செயற்­பா­டுகள், செய்­திகள் போன்­ற­வற்றை பெரும் பகு­தி­யி­ன­ரிடம் எளி­தாக சென்­ற­டைய இவர்கள் வழி­வ­குக்­கி­றார்கள்.

ஐ.எஸ். பண­வ­ரவு, ஆயு­த­வ­ரவு

பணக்­கார ஆத­ர­வா­ளர்­க­ளிடம் இருந்து நன்­கொ­டை­யா­கவும், சில கொள்ளை சம்­ப­வங்­களில் கொள்­ளை­ய­டித்த பணத்­தையும் வைத்து இவர்கள் இயங்கி வரு­கி­றார்கள்.

குறைந்­தது 3 மில்­லியன் டொலர்கள் வரை இவர்­க­ளுக்கு தினமும் உலகின் வெவ்­வேறு இடங்­களில் இருந்து நிதி­யு­தவி வந்­த­வண்ணம் உள்­ளது.

இந்­தியா உட்­பட 20 நாடு­களில் உள்ள நிறு­வ­னங்­களின் மூலம் ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்­புக்கு ஆயு­தங்கள் தயா­ரிக்க உதவும் மூலப்பொருட்கள் வழங்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஐ.நா. சபை­யினால் நடத்­தப்­பட்ட ஆய்வின் மூலம் துருக்­கியை சார்ந்த 13 நிறு­வ­னங்­களும் அதற்­க­டுத்­த­ப­டி­யாக இந்­தி­யாவை சார்ந்த 7 நிறு­வ­னங்­களும் உட்­பட அமெ­ரிக்கா மற்றும் பிரேஸில் போன்ற நாடு­களில் செயற்­படும் நிறு­வ­னங்­களில் இர­சா­யன ஆயு­தங்கள், 
வெடி மருந்­து­களை தூரத்தில் இருந்து வெடிக்க செய்­வ­தற்­கான அலை­பே­சிகள் போன்ற 700 பொருட்­களை தயா­ரித்து ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்­புக்கு விற்­பனை செய்­துள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

மேற்­கத்­திய நாடுகள் இவர்­களை உலகை அழிக்க பேர­ழிவை ஏற்­ப­டுத்தும் ஏஜென்ட்­டுகள் என்று குறிப்­பி­டு­கி­றார்கள். ஆனால், ஐ.எஸ், அவர்­க­ளுக்­கான உரிமை போர் இது என்று விளக்­க­ம­ளிக்­கி­றார்கள். 

ஆனால், இதற்கு மத்­தியில் அப்­பாவி மக்கள் தான் அதிகம் உயிர் இழக்­கி­றார்கள். உல­கத்தை திரும்பிப் பார்க்க வைத்த ஐ.எஸ். அமைப்பின் தாக்­கு­தல்கள்

* பிரசல்ஸ் நகரத் தாக்­குதல்

பெல்­ஜியம் நாட்டின் தலை­நகர் பிரசல்ஸ் நகரில் சென்ற மாதம் 22ஆம் திகதி ஜவெண்டம் சர்­வ­தேச விமான நிலை­யத்­திலும் மேல்பீக் சுரங்க புகை­யி­ரத நிலை­யத்­திலும் இடம்­பெற்ற தாக்­கு­தலில் 30க்கும் மேற்­பட்டோர் உயி­ரி­ழந்­தனர். 200க்கும் மேற்­பட்ட மக்கள் காய­ம­டைந்­தி­ருக்­கி­றார்கள்.

* பாரிஸில் தொடர் தாக்­குதல்

பிரான்ஸ் தலை­நகர் பாரிஸில் கடந்த வருடம் நவம்பர் 13 ஆம் திகதி மிகப்­பெ­ரிய தொடர் தாக்­கு­தலை நடத்­தி­னார்கள்.பிரான்ஸ் விளையாட்­ட­ரங்கம் மற்றும் செயின்ட் டெனிசு என்ற வடக்குப் புற­நகர்ப் பகு­தி­யிலும் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது.

மூன்று வெவ்­வேறு குண்­டு­வெ­டிப்­பு­களும், ஆறு இடங்­களில் துப்­பாக்­கிச்­சூட்டு நிகழ்­வு­களும் இடம்­பெற்­றன. இந்த தாக்­கு­தலில் 127 பேர் உயி­ரி­ழந்­த­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது, தாக்­குதல் நடத்­தி­ய­வர்கள் அனை­வரும் கொல்­லப்­பட்­டார்கள்.

ரஷ்ய விமானத் தாக்­குதல்

* பய­ணிகள் மற்றும் விமானப் பணி­யா­ளர்கள் உட்­பட 224 பேர் பய­ணித்த 7K9268 எனும் விமா­னமே கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திக­தி­யன்று சினாய் தீப­கற்­ பத்­திற்­க­ருகே நெதேல் என்ற பகு­தியில் விபத்­துக்­குள்­ளா­னது.

சிரி­யாவில் ரஷ்யா தமது இயக்­கத்­திற்கு எதி­ராக மேற்­கொண்ட விமானப் படை தாக்­கு­த­லுக்கு பதி­லடி கொடுக்­கவே ஐ.எஸ்.அமைப்பு இத்­தாக்­கு­தலை மேற்­கொண்­ட­தா­கவும் தெரி­விக்­கின்­றது.

இத்­தாக்­கு­தலை உறு­திப்­ப­டுத்தும் வகையில் விபத்­திற்­குள்­ளான விமா­னத்தை ஒத்த வடிவில் விமா­ன­மொன்று வெடித்துச் சிதறும் காணொ­ளி­யையும் தமது இணை­யத்­த­ளத்தில் வெளி­யிட்­டுள்­ளது.

விமானம் விபத்­துக்­குள்­ளா­னமை தொடர்பில் உறு­தி­யான தக­வலை ரஷ்யா தெரி­விக்­க­வில்லை. இருந்தும் இது ஐ.எஸ். அமைப்­பி­னரின் தாக்­கு­த­லாக இருக்­க­வேண்­டு­மென அர­சியல் அவ­தா­னிகள் தெரி­விக்­கின்­றனர்.

மேலும், ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் தாக்­குதல் பட்­டி­யலில் இலங்­கையும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

சர்­வ­தேச பாதுகாப்பு நிலை­மைகள், போர் மோதல்கள் தொடர்பில் ஆய்வு நடத்தும் அமெ­ரிக்க நிறு­வ­ன­மான சர்­வ­தேச யுத்த ஆய்வு நிறு­வ­னத்­தினால் இந்த எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

சர்­வ­தேச நாடு­களில் தாக்­குதல் நடத்­து­வது தொடர்பில் ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்பு புதி­தாக வெளி­யிட்­டுள்ள உலக வரை­ப­டத்தில் இலங்­கையும் குறிக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த நவம்பர் மாதம் ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்பு வெளி­யிட்­டி­ருந்த வரை­ப­டத்தில் இலங்கை உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என்பதும் இங்கு சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

இலங்­கையில் உள்­ள­வர்­க­ளுடன் தொடர்­பு­களைப் பேணி கடந்த ஆண்டில் இலங்­கை­யர்­களை அழைத்து அவர்­க­ளுக்கு பயிற்சி வழங்கி அவர்­களின் ஊடாக தீவி­ர­வாத செயற்­பா­டு­களை மேற்­கொள்ள அந்த அமைப்பு முயற்­சித்து வரு­வ­தாகக் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.

ஈராக், பலஸ்­தீனம், சிரியா, இஸ்ரேல், லெபனான், அமெ­ரிக்கா, கனடா, சவூதி அரே­பியா, ஈரான், சீனா, இந்­தியா, இலங்கை உள்­ளிட்ட பல நாடு­களை தமது இலக்­காக தீவி­ர­வாத அமைப்பு பட்­டி­ய­லிட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டே இலங்­கையில் தற்­போது ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களை தேடும் பணிகள் துரி­த­மாக மேற்­கொள்ளப்பட்டுவ­ரு­வ­தாக அறி­ய­மு­டி­கி­றது.

மேலும் ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்பின் 60 இணைய தளங்­களை முடக்­கு­வது குறித்து தற்­போது இலங்கை அர­சாங்கம் கவனம் செலுத்தி வரு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தீவி­ர­வாத அமைப்­பிற்கு சொந்­த­மான இந்த இணைய தளங்கள் பல­வற்றை பல நாடுகள் தடை செய்­துள்­ளன.

எனினும், இந்த இணைய தளங்­களில் பல, ஐரோப்பிய நாடுகளின் இணைய நிறுவனங்களினால் செயற்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் 44 இணைய தளங்களை இந்தியா முடக்கியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 45 குடும்பங்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்து கொள்ள சென்றுள்ளதாக கிடைத்த புலனாய்வுத் தகவல்களை அடுத்து அரசாங்கம் இணைய தளங்களை முடக்குவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, புலனாய்வுப் பிரிவின் இந்த தகவல்களை பொய்ப்பிக்க அரச சார்பற்ற நிறுவனமொன்று முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தவேளையில் ”ஐ.எஸ்., பயங்கரவாதிகளை அடியோடு ஒழிப்பதுதான், என் முதல் பணி,” என, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்த, ராணுவ உயர் அதிகாரிகள் கூட்டத்தில், ஒபாமா பேசியபோது, உலகின் அமைதியை சீரழித்து வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பலம் குறையத் துவங்கியுள்ளது.

பெல்ஜியத்தில் சமீபத்தில் நடந்த தாக்குதலை பார்க்கும்போது, கொடூர தாக்குதல்கள் நடத்தும் பலம் அவர்களிடம் இன்னமும் உள்ளமை தெரியவருகின்றது.
அதனால், ஐ.எஸ். பயங்கரவாதிகளை அடியோடு ஒழிப்பதுதான் என் முதல் பணி; அவர்களின் தலைமை, நிதி வசதி, உட்கட்டமைப்பு ஆகியவற்றை முற்றிலும், அழிக்க வேண்டும். 

இது போன்ற தாக்குதல்களை இனியும் பொறுத்துக்கொள்ள கூடாது என்றார். ஐ.எஸ். இயக்கத்தின் இலக்குகள் குறித்த துல்லியமான தகவல்கள் இல்லாத நிலையில் அது எங்கே செல்லப்போகிறது என்பதற்கு காலம்தான் பதில் கூற வேண்டும்.
Tags:
Privacy and cookie settings