டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க பொது வாக்கெடுப்பு... கேஜ்ரிவால் !

பிரிட்டனில் நடத்தப்பட்ட பொதுவாக் கெடுப்பைப் போல டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்க பொதுவாக் கெடுப்பு நடத்த வேண்டும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற பிரிட்டன் பொதுவாக் கெடுப்பு நடத்தியது. இதில் பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் நடத்தப்பட்ட பொதுவாக் கெடுப்பைப் போல டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்க பொதுவாக் கெடுப்பு நடத்த வேண்டும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற பிரிட்டன் பொதுவாக்கெடுப்பு நடத்தியது. இதில் பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், பிரிட்டன் பொதுவாக்கெடுப்பையடுத்து டெல்லிக்கும் மாநில அந்தஸ்துக்கான பொதுவாக்கெடுப்பு விரைவில் நடத்தப்பட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவாலின் இந்த கோரிக்கையை அபாயகரமானது என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அரசமைப்புச் சட்டம் எந்த ஒரு பொதுவாக் கெடுப்பையும் அனுமதிப்பதில்லை. 

கேஜ்ரிவால் அபாயகரமான ஒரு பாதையில் செல்கிறார். பிற மாநிலங்களும் இத்தகைய பொதுவாக்கெடுப்பைக் கோரும் நிலைமைகளை அவர் உருவாக்கப்பார்க்கிறார்.

நாட்டில் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் உள்ள நிலையில்கேஜ்ரிவால் வேண்டுமென்றே இந்த விவகாரத்தைக் கிளறுகிறார். கேஜ்ரிவாலின் இந்த நீலைப்பாடு தேச விரோதமானது என்றார்.
Tags:
Privacy and cookie settings