இணையத்தை மூழ்கடித்த வீடியோ !

மும்பையில் உள்ள கடற்கரையில் 3 இளம்பெண்கள் நடனமாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.
இணையதளத்தில் ஒரு வீடியோ காட்டுத்தீயாக பரவியுள்ளது. இணையதளத்திற்கே மூச்சு முட்டும் அளவுக்கு அந்த வீடியோ தீயாக பரவியுள்ளது. 

அந்த வீடியோவில் அப்படி என்ன உள்ளது என்று நினைக்கிறீர்களா? மும்பையில் உள்ள ஜுஹு கடற்கரையில் தான்யா சமோலி, மோக்ஷதா, ஹர்ஷிதா 

ஆகிய 3 இளம்பெண்கள் நடனமாடிய வீடியோவை தான் மக்கள் இப்படி ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.

ஆங்கிலப் பாடலுக்கு மூன்று பேரும் இசைக்கு ஏற்றவாறு ஆடுவதை தான் அத்தனை பேரும் ஆவலுடன் பார்க்கிறார்கள். 

நடனமாடிய பெண்களில் ஒருவரான தான்யா தான் டான்ஸ் மாஸ்டர். தான்யாவின் திறமையை பலரும் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings