கோழிகளை பயன்படுத்தி வறுமையை ஒழிக்கலாம் பில் கேட்ஸ் !

மெரிக்க வர்த்தகப் புள்ளி, தொழிலதிபர், கொடையாளி, முதலீட்டாளர், புரோகிராமர் என பல முகங்களை கொண்டவர். உலகின் மாபெரும் பணக்காரர்களுள் ஒருவரான பில் கேட்ஸ், 
வறுமைக்கான மாற்று மருந்தாய் திகழும் தனது திட்டம் ஒன்றை முன் வைத்துள்ளார்..!

உடனே அதிநவீன, அறிவியல் திட்டம் என்று நினைக்க தொடங்கி விட வேண்டாம் . அதாவது, கோழிகளை பயன்படுத்தி வறுமையை ஒழிக்கலாம் என்கிறார் பில் கேட்ஸ்,

எப்படி..?

கடந்த ஜூன் 8-ஆம் தேதி அன்று, தனது தொண்டு நிறுவனம் ஆனது ஹெய்பர் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தோடு இணைந்து செயல்பட இருப்பதாக பில் கேட்ஸ் அறிவித்தார்.
ஹெய்பர் இண்டர்நேஷ்னல் ஆனது தொண்டு அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள ஏழை குடும்பங்களுக்கு கால்நடை நன்கொடை வழங்குவதில் கவனம் செலுத்தும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு நிறுவனங்கள் இணைந்து வளர்ப்பிற்காக கோழிகள் தேவைபபடும் நாட்டு மக்களுக்கு கோழிகளை வழங்கி, அவர்கள் வறுமையை விட்டு வெளியே வந்து வாழ்கை தரத்தை உயர்த்தி கொள்ள உதவ இருக்கிறது.

இந்த பணிக்காக, பில் கேட்ஸ் தனது ஆரம்ப நன்கொடையாக சுமார் 100,000 கோழிகளை வழங்க இருக்கிறார்.
கோழிகள் தொடர்ச்சியான ஒரு அடிப்படையில் பெருகி கொண்டே போகும், ஆகையால் கோழிகள் இனப்பெருக்க விடயத்தில் எந்த விதமான முதலீடும் தேவைப்படாது, வறுமை ஒழிப்பும், வளர்ச்சியும் சாத்தியமாகும் என்கிறார் பில் கேட்ஸ்.

கோழிகளை வளர்க்கும் குடும்பங்கள் அவைகளை இறைச்சியாக கூட பயன்படுத்திக் வியாபாரம் செய்யலாம், அதன் மூலம் அத்தியாவசிய செலவுகளை நிகழ்த்திக்கொள்ளலாம் என்றும் பில் கேட்ஸ் எண்ணுகிறார்.

உடன், கோழிகள் ஆனது மிகவும் மலிவான செலவில், அதிக கவனிப்பு இன்றி வளர்க்கலாம். உடன் சமூகத்தில் தொழில் முனைவோர் பாத்திரங்களை ஏற்க பெண்களுக்கு அதிக அதிகாரம் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் பில் கேட்ஸ் நம்புகிறார்.
மேற்கு ஆப்ரிக்காவில் நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பயணங்களின் அடிப்படையில் பார்க்கும் போது மூன்று மாத காலத்தில் 8 முதல் 10 கோழிகள் வரை நன்கொடை பெற்ற ஒருவர் சுமார் 40 கோழிக்குஞ்சுகளை பெற்றுள்ளார்.

ஒரு கோழியானது, ஐந்து டாலருக்கு விற்கப்பட்டாலும் கூட ஆண்டுக்கு சுமார் 1000 டாலர்கள் வரை சம்பாதிக்க முடியும் என்று பில் கேட்ஸ் கணக்கிட்டுள்ளார்.

கேட்ஸ் அறக்கட்டளையின் விவசாய வளர்ச்சி திட்ட மூத்த அதிகாரியான டொனால்ட் க்றுமாவும் (Donald Nkrumah) கோழிகள் - பயிர்கள் போன்ற பருவநிலை வருமானம் இல்லாத காலத்தில் சிறந்த மாற்றாக இருக்கும் என்று கருத்து கூறியுள்ளார்.

உதாரணமாக, கிழக்கு ஆப்பிரிக்காவில் பல விவசாயிகள் தங்கள் கோழிகள் இருந்து கிடைக்கும் வருவாயை மாடுகள் வாங்க பயன்படுத்திக் கொண்டு 
அதன் மூலம் பால், இறைச்சி ஆகிய வியாபாரங்களை அதிகம் நிகழ்த்துகின்றனர். நிக்ரூமாவில், குடும்ப வருவாயின் 30 முதல் 40 சதவிகிதமாக, கால்நடைகள் உள்ளன.

நெடுங்காலமாக, கூட்டு முயற்சியின் மூலமாக தான் வறுமை என்பது மாற்றப்பட்டு, மக்கள் வளர்ச்சியை நோக்கி பயணிக்க உதவும் என்று பில் கேட்ஸ் கூறி வந்தது மெல்ல மெல்ல சாத்தியப்படுவது போல தோன்றுகிறது.
Tags:
Privacy and cookie settings