அமெரிக்காவின் பிரபல ஊடகவியலாளர் ஒருவரை ஹோட்டல் அறையில் நிர்வாணமாகப் படம் பிடித்தமை தொடர்பாக அவருக்கு 5.5 கோடி டொலர் (சுமார் 777 கோடி ரூபா) இழப்பீடு

எரின் அன்ட்ரூஸ் எனும் இப் பெண் ஊடகவியலாளர், அமெரிக்காவின் பல தொலைக்காட்சி அலை வரிசைகளில் பணியாற்றியவர்.
இவர் பிரபலமான விளையாட்டுத் துறை ஊடகவியலாளர்களில் ஒருவர். மைக்கல் டேவிட் பாரெட் (46) எனும் நபர், எரின் அன்ட்ரூவை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்தார்.
2008 ஆம் ஆண்டு, டென்னஸி மாநிலத்தின் நாஸ்விலே நகரிலுள்ள மெரியொட் ஹோட்டல் அறை யொன்றில் எரின் அன்ட்ரூஸ் தங்கியிருந்த போது,
அந்த அறைக்கு அடுத்த அறையில் மைக்கல் டேவிட் பாரெட் தங்கியிருந்தார்.
அந்த அறைக்கு அடுத்த அறையில் மைக்கல் டேவிட் பாரெட் தங்கியிருந்தார்.

எரின் அன்ட்ரூஸை மைக்கல் பாரெட் இரகசியமாக வீடியோ படம் பிடித்தார்.
அதேபோல், விஸ் கொன்ஸின் மாநிலத்தின் மிலாவுகீ நகரிலுள்ள ரெடிசன் எயார்போர்ட் ஹோட்டலில்
எரின் அன்ட்ரூஸ் தங்கிய வேளையிலும் அவரை இரகசியமாக படம் பிடித்தார் மைக்கல் பாரெட்.
எரின் அன்ட்ரூஸ் தங்கிய வேளையிலும் அவரை இரகசியமாக படம் பிடித்தார் மைக்கல் பாரெட்.
ஹோட்டல் அறையில் எரின் அன்ட்ரூஸ் முழு நிர்வாண நிலையில் இருந்த போது
அவரை மைக்கல் பாரெட் இரகசியமாக வீடியோவில் படம் பிடித்திருந்தார்.
அவரை மைக்கல் பாரெட் இரகசியமாக வீடியோவில் படம் பிடித்திருந்தார்.
2009 ஆம் ஆண்டு இவ் வீடியோ வொன்று இணையத்தில் வெளியாகி வேகமாக பரவத் தொடங்கியது.
இதையறிந்து பெரும் அதிர்ச்சியடைந்த எரின் அன்ட்ருஸ், தனது தந்தையிடம் இது பற்றி கூறி அழுதார்.
இதையறிந்து பெரும் அதிர்ச்சியடைந்த எரின் அன்ட்ருஸ், தனது தந்தையிடம் இது பற்றி கூறி அழுதார்.
இவர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து 2009 ஒக்டோபரில் மைக்கல் பாரெட் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து எரின் அன்ட்ரூஸின் மற்றொரு வீடியோவும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
மைக்கல் பாரெட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் அவருக்கு 30 மாத சிறைத்தண்டனை விதித்து 2010 ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2012 ஆம் ஆண்டு அவர் விடுதலையானார்.
அதேவேளை, மேற்படி நிர்வாண வீடியோ காரணமாக தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக மைக்கல் பாரெட்டும் நாஷ்வில்லே மெரியொட் ஹோட்டல் நிர்வாகமும் தனக்கு 75 மில்லியன் (7.5கோடி) டொலர் (1060 கோடி ரூபா) நஷ்ட வழங்க வேண்டுமெனக் கோரி எரின் அன்ட்ரூஸ் வழக்குத் தொடுத்தார்.
இவ் வழக்கு விசாரணையின்போது தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் குறித்து நீதிமன்றில் கண்ணீருடன் சாட்சியமளித்தார் எரின்.
இவ் வழக்கை விசாரித்த நீதிமன்றம் எரின் அன்ட்ரூஸுக்கு 5.5 கோடி டொலர் (சுமார் 777) இழப்பீடு வழங்க வேண்டும் என கடந்த திங்கட்கிழமை தீர்ப்பளித்தது.
இத் தொகையில் 51 சதவீதத்தை அதாவது 2.8 கோடி டொலர்களை மைக்கல் பாரெட்டும் 49 சதவீதத்தை (2.7 கோடி டொலர்) நாஷ்வில்லே மெரியொட் ஹோட்டல் நிர்வாகமும் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இத் தீர்ப்பு குறித்து நீதிமன்றத்துக்கும் ஜூரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ள எரின் அன்ட்ரூஸ், மக்கள் தனக்கு அளித்த பெரும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.