கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவுள்ள 4 அடி நீள எலி !

வடக்கு லண்டனைச் சேர்ந்தவர் டோனி ஸ்மித். இவர் எரிவாயு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் தனது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்
பெரிய எலி ஒன்று அருகிலிருந்த வளைக்குள் இருந்து வெளியில் வந்துள்ளது. அதைக்கண்டதும் டோனி ஸ்மித் பிடித்து விட்டார்.

அந்த எலி வாலின் நீளத்தோடு சேர்த்து 4 அடி நீளமும் 11½ கிலோ எடையும் கொண்டுள்ளது.

பூனையை விடவும் உருவத்தில் மிகவும் பெரிதாக உள்ளது. இதுவரை பிடிக்கப்பட்ட எலிகளிலேயே இதுதான் மிகப்பெரிய எலி என்று தெரிய வந்துள்ளது.

எனவே, கின்னஸ் புத்தகத்திலும் இது இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags: