சந்தோசமான வாழ்க்கைக்கு 20 வழிகள் !

அன்றாட வாழ்க்கையினை மிகவும் சுறு சுறுப்போடும், சந்தோஷமாகவும் வாழ வேண்டு மெனில் கீழே கொடுக்கப் பட்டுள்ள 20 வழி முறைகளை பின்பற்றுங்கள்.

20 வழிமுறைகள்

1. அன்றாட வேலைகளைப் பட்டியலிட்டு நேரம் ஒதுக்குங்கள்

2. எந்த விடயத்தையும் நேர்மறையாக எண்ணுங்கள்

3. அதிகாலையில் 5 - 6 மணிக்கெல்லாம் விழித்திடுங்கள்

4. தினமும் குறைந்தது ஆறு கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள்

5. காலை உணவைத் தவிர்க்க வேண்டாம். சரியான நேரத்துக்குச் சாப்பிடுங்கள்

6. கீரை, காய்கறிகள், பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

7. ஆரோக்கியமான நொறுக்குத்தீனி சாப்பிடுங்கள்

8. உடற்பயிற்சி செய்யத் தவறாதீர்கள்

9. யோகா முறைப்படி பயின்று, வீட்டிலேயே தினசரி முயற்சி செய்யுங்கள்.

10. தினமும் புத்தகம் வாசிப்புக்கு அரை மணி நேரத்தை ஒதுக்குங்கள்

11. பலவீனங்களைக் கண்டு பயப்படாதீர்கள்

12. அலுவலகம், வீடு தாண்டி பயணம் செய்து இயற்கையை நேசியுங்கள்

13. குறுகியகால மற்றும் நீண்டகால இலக்குகளை நிர்ணயித்துச் செயல்படுங்கள்

14. உங்களை மகிழ்ச்சியாக்கும் விடயங்களை செய்யத் தவறாதீர்கள்.

15. தோல்விகளைக் கண்டு அஞ்ச வேண்டாம்.

16. முடியாது, இல்லை ஆகிய வார்த்தைகளைத் தேவைப்படும் இடங்களில் கண்டிப்பாக உபயோகியுங்கள். வேலைப்பளுவை ஏற்றிக் கொள்ளாதீர்கள்

17. கனவுகளை விட்டுக் கொடுக்காதீர்

18. தினமும் புதிய விடயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்.

19. இரவு 11 மணிக்கு மேல் விழித்திருப்பதைத் தவிர்த்திடுங்கள்.

20. ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு மணி நேரம் தூங்கி உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு அளியுங்கள்.
Tags:
Privacy and cookie settings