மன அழுத்தம் போக்கும் ரெப்ளெக்ஸாலஜி ! #Refleksoloji

அவசர உலகில் மனஅழுத்தம் நம் அனைவருக்குமே அழையா விருந்தாளி. அழுத்தும் பணிச்சுமை, பரபரப்பான வாழ்க்கை, உறவுகளில் பிரச்னை. என பல்வேறு காரணங்களால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. 
மன அழுத்தம் போக்கும் ரெப்ளெக்ஸாலஜி ! #Refleksoloji
இதைக் கவனித்து, ஆரம்ப நிலையிலேயே கட்டுப் படுத்தா விட்டால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் என வரிசையாக பாதிப்புகள் நம்மைத் தாக்கும். 

மன அழுத்தம் தவிர்க்க யோகா, தியானம் செய்வதைப் போல, அதிக ஆற்றல் கொண்டது ரெஃப்ளெக்ஸாலஜி. இந்த முறையில், கை, கால் உட்தசை களில் கட்டை விரல்களால் அழுத்தம் கொடுக்கப்படும். 

கை, காலில் உள்ள நரம்புகள், உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளின், நரம்புப் பகுதிகளின் சங்கமமாகும். 
இந்தப் புள்ளிகளைத் தேர்ந்தெடுத்து தகுந்த விதத்தில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் மனம் அமைதிய டையும். மன அழுத்தத்தின் பாதிப்புகள் குறையும். 

மன அழுத்தத்துக்கு மட்டுமல்ல. உடலில் உள்ள குறைபாடுகளைக் கண்டறியவும் அவற்றைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

யார் இந்த சிகிச்சையைச் செய்து கொள்ளலாம்?
மன அழுத்தம் போக்கும் ரெப்ளெக்ஸாலஜி ! #Refleksoloji
எந்த வயதினரும் ரெஃப்ளெக்ஸாலஜி செய்யலாம். நீண்ட நேரம் நின்றபடி வேலை செய்பவர்கள், காலில் பித்த வெடிப்பு உள்ளவர்கள், 

தலைவலி, கால் வலி போன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் ரெஃப்ளெக்ஸாலஜி செய்வதால், நல்ல பலன் கிடைக்கும். 
எஸ்எம்எஸ் மூலம் ரயில் பயனச்சீட்டு முன் பதிவு செய்வது !
அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மருத்துவரின் ஆலோச னைப்படி இதைச் செய்யலாம்.
பலன்கள்

*கை, கால் வலி, உடல் வலி, அசதி, சோர்வு நீங்கும். உடல், மனம் புத்துணர்வு பெறும்.

*ஆழ்ந்த தூக்கம் வரும்.

*சர்க்கரை நோய் உள்ளவர் களுக்கு ஏற்படும் கை, கால் வலி, வீக்கத்துக்கு நல்ல நிவாரணம் தரும்.
Tags: