உங்கள் இரத்த வகைக்கு ஏற்ற உடற்பயிற்சி !

மனித உடலில் ஓடும் இரத்தத்தின் நிறம் சிவப்பு தான். ஆனால் அந்த இரத்தத்திலும் வகைகள் உள்ளன. ஒவ்வொருவரின் உடலிலும் ஒவ்வொரு வகையான இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது. 



அதில் ஏ, பி, ஏபி மற்றும் ஓ போன்ற இரத்த வகைககள் உள்ளன. இரத்த வகை என்பது ஒரு சக்தி வாய்ந்த மரபணு கைரேகை எனலாம். ஏனெனில் இரத்த வகையைக் கொண்டு பலவற்றை நம்மால் அறிய முடியும். 

அதில் நீங்கள் உண்ணும் உணவு, மேற்கொள்ளும் உடற் பயிற்சியைப் பொருத்து உங்கள் உடல் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை இரத்தத்தை பரிசோதிப்பதன் மூலம் அறியலாம்.

ஒருவர் தன் இரத்த வகைக்கு ஏற்ப உடற் பயிற்சியையும், உணவையும் உட்கொண்டு வந்தால், அவரது ஆரோக்கி யத்தை மேம்படுத்த லாம். இப்போது அது குறித்து காண்போம்.

1) இரத்தப் பிரிவு ஓ

ஓ இரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்களின் உடலில் இரத்த ஓட்டம் சற்று மந்தமாக இருக்கும். இவர்களுக்கு போதிய உடலுழைப்பு இல்லாமல் இருந்தால், நாளடைவில் மிகவும் சோம்பேறியாகி விடுவார்கள்.

சிறந்த உடற்பயிற்சி

ஓ இரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஜாக்கிங், ஜிம்னாஸ்டிக்ஸ், காலிஸ்தெனிக்ஸ், நடைப் பயிற்சி, நீச்சல் மற்றும் சைக்கிளிங் போன்ற வற்றை தினமும் தவறாமல் 1 மணிநேரமாவது செய்ய வேண்டும்.

சிறந்த டயட்

ஓ இரத்தப் பிரிவினர் சுத்திகரிக் கப்பட்ட கார்போ ஹைட்ரேட் உணவுக ளையும், பால் பொருட்களையும் அதிகம் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. சொல்லப் போனால் இவர்கள் குகை மனிதனின் உணவைப் போல் பச்சை காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.



2) இரத்தப் பிரிவு ஏ

ஏ இரத்தப் பிரிவினர் முறுக்கேறிய சக்தியுடன் செயல் படுவார்கள். அதாவது இவர்கள் மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். இதன் காரணமாகவே அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகி சோர்ந்து விடுவார்கள்.

சிறந்த உடற்பயிற்சி

இவர்கள் சுறுசுறுப்புடன் இருப்பதால் இன்டென்ஸ் உடற் பயிற்சிகளை செய்யலாம் என்று நினைப்பது தவறு. இந்த பயிற்சியை செய்தால், ஏ இரத்த பிரிவினரின் உடலில் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவு அதிகரித்து, தசைகள் எளிதில் சோர்ந்து விடும்.

எனவே இவர்கள் எப்போது தங்களை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளும் உடற் பயிற்சிகளான யோகா, பிலேட் உடற்பயிற்சி மற்றும் சம அளவு உடற் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.

சிறந்த டயட்

ஏ இரத்த வகையினர் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் மீன் போன்ற வற்றை அதிகம் உட்கொள்வது, அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

3) இரத்தப் பிரிவு பி

பி இரத்த வகையைச் சேர்ந்தவர்கள் கடுமையாக உடற் பயிற்சியை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அளவாக, உடலை ரிலாக்ஸ் செய்யும் படியான உடற்பயிற்சிகளை செய்தலே போதுமானது.

சிறந்த உடற்பயிற்சி

பி இரத்த பிரிவினர் ஜாக்கிங், நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், யோகா போன்ற வற்றை தினமும் செய்து வந்தால் போதுமானது. மேலும் டென்னிஸ், சைக்கிளிங் போன்ற வற்றிலும் ஈடுபடலாம்.



சிறந்த டயட்

பி இரத்த வகையினர் மட்டுமே பால் பொருட்களை அஞ்சாமல் உட்கொள்ளலாம். மேலும் இவர்கள் இறைச்சி, பழங்கள், காய்கறிகள் என்று அனைத்தையும் நன்கு ருசிக்கலாம்.

4) இரத்தப் பிரிவு ஏபி

இந்த இரத்தப் பிரிவினரின் டி.என்.ஏ, இரத்தப் பிரிவு ஏ மற்றும் பி-யின் கலப்பினம் என்பதால், இந்த இரண்டு இரத்தப் பிரிவின் காரணிகளும் இவர்களுக்கு பொருந்தும்.

சிறந்த உடற்பயிற்சி

இந்த இரத்த பிரிவினர் கடுமையான கார்டியோ பயிற்சிகளில் ஈடுபட்டால், தசை மற்றும் மூட்டு பிடிப்புகளால் அவஸ்தைப் படுவார்கள்.

எனவே நடைப் பயிற்சி, நடனம், யோகா போன்றவற்றில் ஈடுபடுவது, இவர்களது உடல் நலத்திற்கு நல்லது.

சிறந்த டயட்

ஏபி இரத்தப் பிரிவினர் நற்பதமான பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்ற வற்றை உட்கொள்வது நல்லது. மேலும் இறைச்சி மற்றும் பால் பொருட்களை சற்று அளவாக உட்கொள்வது நல்லது.
Tags:
Privacy and cookie settings