(டி.என்.எஸ்) மலட்டுத்தன்மை காரணமாக சிலர் குழந்தையின்றி தவிக்கின்றனர். அவர்களின் குறைகளை போக்க விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு மற்றும் கரு முட்டை தயாரித்து வியத்தகு சாதனை படைத்துள்ளனர்.
தொடக்கத்தில் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேலில் உள்ள வெய்ஷ்மான் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எலி, முயல் உள்ளிட்ட கூர்மையான பற்கள் கொண்ட விலங்குகளின் ஸ்டெம் செல்களில் இந்த ஆய்வு மேற்கொண்டனர்.

அவற்றின் உடலில் வளர்ச்சியின் தொடக்க நிலையில் உள்ள ஸ்டெம் செல்களில் இருந்து செக்ஸ் செல்களை விஞ்ஞானிகள் சேகரித்தனர். 

அதை மிகவும் கவனமாக ஒரு வாரம் ஆய்வு கூடத்தில் வைத்து பாதுகாத்தனர். அதே போன்று தோல் திசுக்களையும் எடுத்து அதை ஏற்கனவே எடுத்து பாதுகாத்து வைத்துள்ள செக்ஸ் செல்களுடன் சேர்த்தனர். 
அவை உயிரணு மற்றும் கரு முட்டைகளாக வளர்ச்சி அடைந்தன. அதை பின்னர் எலிகளின் கருப்பை மற்றும் விரைப்பையில் சேர்த்தனர். அவை வளர்ச்சி அடைந்த கரு முட்டையாகவும், உயிரணுவாகவும் ஆனது. 

அதே பாணியில் மனிதர்களின் உடலில் இருந்தும் ஸ்டெம் செல் மற்றும் தோல் திசுக்களை எடுத்து கரு முட்டை மற்றும் உயிரணுக்களை உருவாக்கினர்.