தமிழக வரலாற்றில் அதிக இடம் பெற்று எதிர்கட்சியான திமுக !

சென்னையில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக ஆட்சியின் அலங்கோலத்தை மக்கள் புரிந்து கொண்டதை தான் திமுகவின் வெற்றி எடுத்துக்காட்டுகிறது என்று 
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து ஜெயலலிதா 6வது முறையாக முதல்வர் ஆகிறார்.

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சென்னை லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்ட

வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து பெற்றுக் கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

புதிய அரசுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக கடந்த 2011ம் ஆண்டு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்தது போன்று தற்போதும் இருக்கக் கூடாது.

கடந்த 2011ம் ஆண்டு தேர்தலை விட இந்த தேர்தலில் திமுகவுக்கு பெரிய அளவில் தான் வெற்றி கிடைத்துள்ளது. தமிழக சட்டசபை வரலாற்றிலேயே திமுக போன்று பெரும்பான்யுடன் எந்த கட்சியும் எதிர்கட்சியானது இல்லை.

இந்த வாய்ப்பை அளித்த மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக ஆட்சியின் அலங்கோலத்தை மக்கள் புரிந்து கொண்டதை தான் திமுகவின் வெற்றி எடுத்துக்காட்டுகிறது.

அனைத்து தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா நடந்தது உண்மையே. இது குறித்து அனைத்து பத்திரிக்கைளிலும் செய்தி வெளியானது. பணப் பட்டுவாடா பற்றி சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். இதை தான் திமுக வலியுறுத்துகிறது.
Tags:
Privacy and cookie settings