'மருது' படத்தை திருட்டு சிடியில் பார்த்தால் புரட்சித் தளபதி விஷால் துவம்சம் செய்துவிடுவார் என நடிகர் ஆர்யா கூறியிருக்கிறார். விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ஆர்.கே.சுரேஷ் உட்பட பலர் நடிப்பில் 
வெளியாகியிருக்கும் படம் 'மருது'. இப்படத்திற்கு திருட்டு சிடி வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் விஷால் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். மேலும் 'மருது' வெளியாகும் அன்றே திருட்டு சிடியும் வெளியாகி விடும் எனக்கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் ஆர்யா ''புரட்சித்தளபதி விஷால் 'மருது' படத்திற்கு திருட்டு சிடி வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கக் காத்திருக்கிறார். இதனால் தியேட்டர்களில் மட்டும் சென்று இப்படத்தை பாருங்கள். 

இல்லை யென்றால் விஷால் துவம்சம் செய்துவிடுவார்'' என்று கூறியிருக்கிறார். இப்படம் தமிழ்நாடு முழுவதும் 400 க்கும் அதிகமான தியேட்டர்களில் இன்று வெளியாகியுள்ளது.