பாக்டீரியாவை உருவாக்கும் தங்கம் !

தங்கம் என்ற மஞ்சள் உலோகம் இன்றைக்கு அனை வராலும் விரும்பப் படும் ஒன்றாக உள்ளது. மண்ணில் சுரங்கம் அமைத்து தோண்டி பின்னர் சுத்திகரிக்க ப்பட்டுதான் தங்கம் எடுக்கப் பட்டு வருகிறது.
பாக்டீரியாவை உருவாக்கும் தங்கம் !
ஆனால் மிகத் தூய்மையான தங்கமான 24 கேரட் தங்கத்தை பாக்டீரியா ஒன்று உருவாக் குகிறது என்ற ஆச்சரியமான தகவலை கண்டறிந் துள்ளனர் ஆய்வா ளர்கள்.

அமெரிக்கா வின் மிச்சிகன் பல்கலைக் கழகலத்தின் மைக்ரோ பயாலஜி மற்றும் மாலிக்யூலர் ஜெனடிக்ஸ் துறை ஆராய்ச்சி யாளர்கள் இணைந்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 

அவர்களின் ஆய்வில் பாக்டீரியா ஒன்று சுத்தமான தங்கம் உருவாக்குவதை கண்டறிந்தனர். இந்த பாக்டீரியாவுக்கு ‘குப்ரியா விடஸ் மெட்டாலி டியுரன்ஸ்' என பெயரிட்டு ள்ளனர். 

தங்களின் கண்டு பிடிப்பை ஆஸ்திரியா நாட்டில் நடை பெற்ற ‘பிரிக்ஸ் ஆர்ஸ் எலக்ட்ரா னிக்கா' என்ற கண்காட்சியில் காட்சிக்கு வைத்தனர். 

ஆய்வகத் தில் உருவாக்கப்பட்ட தங்கத்தைக் கொண்டு தங்க முலாம் பூசப்பட்ட ஒரு பொருளையும் காட்சிக்கு வைத்திருந்தனர். ‘த கிரேட் ஒர்க் ஆஃப் மெட்டல் லவ்வர்' என்ற பெயரில் பாக்டீரியா உருவாக்கிய தங்கம் காட்சிக்கு வைக்கப் பட்டது.
பாக்டீரியாவை உருவாக்கும் தங்கம் !
உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த மைக்ரோ பயாலஜி விஞ்ஞா னிகள் இதை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். ஆய்வு முடிவு பற்றி பல்கலைக் கழக மைக்ரோ பயாலஜி பேராசிரியர் கசம் கஷேபி கூறிய தாவது: 

பொதுவாக பாக்டீரியாக்கள் நச்சுத்தன் மையுள்ள பொருட்களில் வளர்வ தில்லை. ஆனால் இந்த பாக்டீரியா இயற்கையில் காணப்படும் நச்சுத் தன்மையுள்ள தங்க குளோரைடு என்ற வேதிப் பொருளில் வளர்கிறது.

இந்த தங்க குளோரைடு நீர்ம தங்கம் எனவும் அழைக்கப் படுகிறது. இந்த பாக்டீரியாவை தங்க குளோரைடில் வளர்த்த போது ஒரே வாரத்தில் தங்க குளோரைடு நீர்மமானது தங்கக் கட்டியாக மாற்ற மடைந்தது.

இயற்கையில் தங்கம் எப்படி உருவாகி றதோ, அதே போன்ற ரசாயன வினை இங்கும் நடந்திருக்கிறது என்று கூறினார். 24 கேரட் பரிசுத்தமான தங்கத்தை பாக்டீரியா உருவாக்குகிறது என்ற கண்டு பிடிப்பு மிக மிக முக்கியமானது. 

அதே நேரம், இந்த தொழில் நுட்பத்தில் தங்கத்தை உருவாக்குவது சவாலானது, அதிக செலவு ஏற்படுத் தக்கூடியது. பெரிய அளவில் உற்பத்தி செய்யும் போது செலவு கட்டுப் படுத்தப் படலாம் என்றும் ஆராய்ச்சி யாளர்கள் கூறியுள்ளனர்.
பாக்டீரியாவை உருவாக்கும் தங்கம் !
தொழில் ரீதியான உற்பத்தி க்கு பாக்டீரியா என்ற உயிரை பயன்படு த்தலாமா?. சுரங்கம் அமைத்து வெட்டி எடுக்கப்படும் தங்கத்தை பாக்டீரி யாவை கொண்டு உருவாக்கினால் 

உலக அளவில் பொருளா தாரத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? சுற்றுச் சூழல் பாதிப்புகள் ஏற்படுமா.. என பல்வேறு சர்ச்சை களையும் ஏற்படுத்தி யிருக்கிறது இந்த ஆராய்ச்சி.
Tags: