கற்றாழை ​ஹெல்த் சீக்ரெட்ஸ் !

ஆரோக்கி யத்துக்கும் அழகுக்கும் பயன்படும் மூலிகைச் செடி, கற்றாழை. கற்றாழையின் சாறும், அதன் சதைப்பகுதியும் தரும் பயன்களோ ஏராளம். கொழ கொழவென இருப்பதால் சிலர் இதைப் பயன்படுத்தத் தயங்குவார்கள். 

கற்றாழை


இதன் கசப்புச் சுவைக்காக ஒதுக்கி வைப்பவரும் உண்டு. ஆனால், இதன் மருத்துவப் பலன்கள் அமோகம். வெளி மருந்தாகவும் உள்மருந்தாகவும் அற்புதம் செய்யும் சஞ்சீவ மூலிகை கற்றாழை.

1 கற்றாழையில் ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டிபயாடிக் நிறைந்துள்ளன. கால்சியம், சோடியம், இரும்புச் சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ், ஜின்க், ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, சி, இ உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.

2 செல் வளர்ச்சிக்கு உதவி புரிகிறது. காயம், தழும்பு, வலிகள் குணமாகின்றன. இதில் உள்ள சதைப் பகுதியை உட்கொள்வதால், அல்சர், புற்று நோய், தொற்று நோய்கள், கீமோ தெரப்பியின் பக்க விளைவுகள் கட்டுப்படும்.

3 கற்றாழைச் சாற்றைத் தினமும் காலையில் ஒரு கிளாஸ் மோருடன் கலந்து உட்கொண்டு வந்தால், கர்ப்பப்பை நோய்கள் வராமல் தடுக்கலாம், பிரச்னையும் குணமாகும்.

4 வயிற்றில் நல்ல பாக்டீரியாவை உருவாக்கி, செரிமான செயல்பாட்டைச் சீராக்கும். இர்ரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் என்கிற உணவு உண்டதும் மலம் கழிக்கும் உணர்வு ஏற்படும் பிரச்னை தீரும்.

5 மூட்டு வீக்கம், மூட்டு இறுகுதல், மூட்டு பலவீனம் குணமாகும். வலி குறையும்.

6 ஆசிட் ரிஃப்லெக்ஸ் என்று சொல்லக் கூடிய உணவுக் குழாயில் அமிலம் வெளியேறி, உணவுக் குழாயில் புண் ஏற்படும் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க கற்றாழைச் சாறு உதவுகிறது.

நெஞ்சு எரிச்சல் குறையும். வயிற்றுப் புண்கள் வராமல் தடுக்கும். சிறந்த மலமிலக்கி யாகச் செயல்படும்.
ஹெல்த் சீக்ரெட்ஸ்


7 நல்ல கொழுப்பை உடலில் சேர உதவும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்.

8 இதில் உள்ள வைட்டமின் சி, சளி, இருமல், மூக்கு அடைப்பு, சுவாசக் கோளாறு களை நீக்கும்.

9 சருமம், முகத்தில் இதன் சாற்றைப் பூசிவர தழும்புகள், கரும்புள்ளிகள், பருக்கள் இன்றி சீரான, அழகான சருமம் கிடைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

10 சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைத்து, இறந்த செல்களை நீக்கும். சருமச் சுருக்கங்கள், சருமத்தில் ஏற்படும் வரிகள், திட்டுக்கள் சரியாகும். பிரசவத்துக்குப் பின் ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்கை நீக்கும்.

11 வாரம் ஒரு முறை கூந்தலில் தடவிவர, கூந்தல் மென்மை யாகும். பளபளப்புடன் காணப்படும். உடல் குளிர்ச்சி அடையும்.

12 அதிகப் படியான நீரை வெளியேற்றி சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும்.
Tags:
Privacy and cookie settings