தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்பை தெரிந்து கொள்வது எப்படி ?

இன்றைய நாட்களில் தெரியாத இலக்கத்தில் இருந்து எமது ஸ்மார்ட் போனிற்கு வரும் அழைப்புக்கள் பெரும் தொல்லையாகவே பார்க்கப்படுகிறது. 
தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்பை தெரிந்து கொள்வது எப்படி ?
எமது தளத்திலும் தெரியாத இலக்கங்களில் இருந்து உங்களது போனிற்கு வரும் அழைப்புக்களை அந்த நொடியே தெரிந்து கொள்வது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். 

அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால், கீழே வழங்கப் பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்பு யாருடையது என்று அந்த நொடியே தெரிந்து கொள்வது எப்படி?

ஆகவே இன்றைய பதிவில் மற்றுமொரு முறை மூலம் உங்களது ஸ்மார்ட் போனிற்கு தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்புக்கள் யாருடையது என்பதை தெரிந்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
இதில் இருக்கும் சிறப்பம்சம் என்ன வென்றால், உங்களுக்கு வரும் அழைப்புக்கள் யாருடையது என்பதை போட்டோவுடன் தெரிந்து கொள்ள கூடியதாய் இருக்கும்.

எப்படி என்று கேட்கிறீர்களா? பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து தொழிற்படும் ஆன்ராயிடு செயலி ஒன்றின் மூலம் இந்த அனைத்து விடயங்களும் சாத்தியம் ஆகின்றன.

இந்த செயலி எவ்வாறு தெரியாத இலக்கங்கள் யாருடையது என்பதை கண்டு பிடிக்கிறது என்று பார்ப்போம்.
தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்பை தெரிந்து கொள்வது எப்படி ?
இந்த செயலி பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து தொழிநுட்படுவதால் உங்களது போனிற்கு வரும் அழைப்புக்குரிய இலக்கம் பேஸ்புக் அல்லது மெசஞ்சர் கணக்கு ஒன்றில் இணைக்கப்பட்டு இருந்தால், 

குறித்த பேஸ்புக் கணக்கில் ப்ரோபைல் போட்டோவுடன் குறித்த இலக்கம் யாருடையது என்பதை பெயர் விபரங்களுடன் உங்களுக்கு காட்டுகிறது.

குறிப்பு இந்த ஆன்ராயிடு சிறப்பு செயலி, உங்களது போனிற்கு வரும் அனைத்து தெரியாத இலக்கங்களையும் சரியாக காட்டா விட்டாலும், 80%-இற்கும் அதிகமான இலக்கங்களை மிகச்சரியாக இனம் கண்டு கொள்கிறது.
டைனோசருக்கு முன்பே தோன்றிய கரப்பான் பூச்சி
இன்றைய காலகட்டத்தில் தெரியாத இலக்கத்தில் இருந்து எமக்கு வரும் தொல்லை அழைப்புக்களில் இருந்து விடுபட இந்த செயலி எமது ஸ்மார்ட் போனில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று தான்..

முதலாவதாக கீழே வழங்கப் பட்டிருக்கும் ஆன்ராயிடு செயலியை உங்களது போனிற்கு பெற்றுக் கொள்ளுங்கள்.

அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, இதிலே போன் நம்பர் மற்றும் பெயர் விபரங்களை வழங்கி கணக்கொன்றை ஆரம்பிப்பதன் மூலம் இந்த சேவையுடன் உங்களை இணைத்து கொள்ளுங்கள்.

அவ்வளவு தான்.. இப்போது உங்களது Call Log ஸ்கேன் செய்யப்பட்டு அனைத்து தெரியாத இலக்கமும் யாருடையது என்பதை அவர்களது போட்டோ வுடன் பட்டியலிட்டு காட்டுகிறது இந்த அருமையான செயலி.
தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்பை தெரிந்து கொள்வது எப்படி ?
இவை தவிர, உங்களுக்கு தேவையில்லாத அழைப்புக்களை ப்லோக் செய்வது என்று இன்னும் பல பயனுள்ள வசதிகளை தருகிறது இந்த செயலி.

ஆனால் கவலையான விடயம் என்ன வென்றால், இந்த செயலி இலங்கை இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கான கூகுள் ப்லே ஸ்டோரிலே கிடைக்காது. 
நம்மை வியப்பில் ஆழ்த்தும் உலகின் சில அதிசயங்கள்
ஆகவே இந்த செயலியை நாம் நேரடியாக தான் தரவிறக்கி  கொள்ள கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்... 
Tags: