சூயிங்கம் சாப்பிடுவதால் உடல் எடையைக் குறைக்க முடியுமா?

உடல் எடையைக் குறைக்க பெரும் பாலானோர் வித்தி யாசமான பலவகை மருந்து களையும், உடற் பயிற்சி களையும் மேற் கொள்வதைப் பார்த்திருக் கிறோம். 


ஆனால் சூயிங்கம் (chewing gum) சாப்பிடுவதால் உடல் எடையைக் குறைக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

ஆம்! அது உண்மை தான்! சூயிங்கம் சாப்பிடும் போது உடலின் வளர்ச்சிதை மாற்ற விகிதம் அதிகரிப்ப தால்,

உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாட்டுடன் இருக்கும் போது இது மிகவும் உதவியாக இருக்கும் என சில ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

ஆராய்ச்சியில் இருந்து கூறப்படுவது என்ன வென்றால், இனிப்புப் பொருளற்ற

சூயிங்கம்மை நிமிடத்திற்கு 100 முறை மெல்லும் பொழுது உடலின் வளர்ச்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது.

இந்த வளர்ச்சிதை மாற்ற விகித அதிகரிப்பின் மூலம் மணிக்கு 70 கலோரிக்கள் உடலி லிருந்து நீக்கப் படுகிறது. 

ஆனால் நிமிடத்திற்கு 100 முறை மெல்லுவது என்பது மிகவும் கஷ்டமான செயல் ஆகும்.


அதற்குக் காரணம், ஒருவரோடு பேசும் போதோ அல்லது மற்ற வேலை களைச் செய்யும் போதோ சூயிங்கம் மெல்லுவதில் கவனம் செலுத்த முடியாது.

சரி, நாம் சூயிங்கத் தினை மெல்லும் போது நமது உடலில் என்ன நடை பெறுகின்றது என்பதைப் பார்ப்போமா? 

பொதுவாக சூயிங்கத்தை மெல்லும் போது காற்றையும் சேர்த்து உட்கொள் கிறோம்,

இந்தக் காற்று நமது உறுப்பு களுக்கு, வயிற்றிற்கு உணவு வருகிறது என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும்.

இதனால் உறுப்புகள் ஓய்வெடுக் காது, தொடர்ச்சி யாக இயங்கும்.

சூயிங்கத்தின் மற்றொரு பயன் என்ன வென்றால், பற்களு க்குச் செல்லும் இனிப்பினைத் தடுக்கும். 

மேலும் சாப்பிட்டு முடிந்தவுடன் சூயிங்கம் எடுத்துக் கொள்வது,


அதிக கலோரிகள் கொண்ட இனிப்பு வகைகளை உட்கொள்வதை விட நல்லது என்று கூறுகின்றனர்.

என்ன நண்பர்களே, நாம் சாதாரண மாகச் சாப்பிடும் சூயிங்கம்மில் இத்தனை விஷயங்கள் உள்ளதா என வியப்பாக இருக்கிறதா…?

இதைப் பற்றி உங்கள் மனதில் தோன்றும் எண்ணங் களைக் கண்டிப் பாகக் கீழே ஒரு கருத்தாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
Tags:
Privacy and cookie settings