உடலின் சக்தியை அதிகரிக்க உதவும் உணவு !

உடலின் உறுதித் தன்மை மற்றும் ஆற்றலை அதிகரிக்க உணவுகள் தான் உதவி புரியும். அதிலும் கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகள் தான் உதவும். 
வைட்டமின் சி
எனவே அந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம் நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் செயல்படலாம். 
இங்கு உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கும் உணவுகள் பட்டியலிடப் பட்டுள்ளன. அவற்றைப் படித்து உங்கள் உணவில் சேர்த்து உங்கள் ஸ்டாமினாவை அதிகரித்துக் கொள்ளுங்கள். 

ஆப்பிளில் ஆன்டி -ஆக்ஸிடன்ட்டுகள், கரையும் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்கள் போன்றவை வளமாக உள்ளது. 

இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். மேலும் இப்பழம் கல்லீரலை சுத்தம் செய்வதோடு, உடல் எடையை பராமரிக்கவும், இதய ஆரோக்கி யத்தை மேம்படுத்தவும் செய்யும். 

முக்கியமாக இதில் உள்ள நார்ச்சத்து தான் உடலில் ஆற்றலை நீண்ட நேரம் தக்க வைக்க உதவுகிறது. 
பாதாமில் உடலுக்கு ஆற்றலை வழங்கும் வைட்டமின் ஈ மற்றம் ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள் ஏராளமான அளவில் உள்ளது.
எலும்புகள் வலிமையாகும்
இவற்றை உட்கொண்டு வந்தால், உடலுக்கு ஆற்றல் கிடைப்பதோடு, எலும்புகள் வலிமையாகும், மூளை மற்றும் இதயம் ஆரோக்கி யமாக செயல்படும். 

பீன்ஸில் இரும்புச் சத்து, நார்ச்சத்து, கார்போ ஹைட்ரேட், புரோட்டீன்கள் மற்றும் கனிமச் சத்துக்கள் அதிகமாக உள்ளது.
எனவே இதனை சாப்பிட்டால், உடலில் ஆற்றல் அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கி யமும் மேம்படும். கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ளது. 

இவை செரிமான மண்டலத்தை ஆரோக்கி யமாக செயல்பட வைக்கும். மேலும் இதனை அளவாக சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வை தருவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.
கார்போ ஹைட்ரேட்
வாழைப் பழத்தில் கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஃபுருக்டோஸ் போன்றவை அதிகம் உள்ளது. 

அதனால் தான் இதனை உட்கொண்டவுடன் உடலுக்கு ஆற்றல் கிடைத்த உணர்வு ஏற்படுகிறது. 

நாவில் நீர் ஊற வைக்கும் ராஜபாளையம் மாங்காய் ஊறுகாய் !

மேலும் வாழைப்பழத்தை அதிகம் சாப்பிட்டால், ஒருவருக்கு ஒருமுகப் படுத்தும் தன்மை அதிகரிக்கும். பீட்ரூட் ஜூஸில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது. 

இந்த வைட்டமின்கள் உடலில் சோர்வை நீக்கி, ஸ்டாமினா அதிகரிக்க உதவும். எனவே நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க நினைத்தால், தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடியுங்கள்.
Tags: