போதைப் பொருள் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்ட ஆண்கள் !

ஈரானில் ஒரு கிராமத்திலுள்ள வயது வந்த அனைத்து ஆண்களுக்கும் போதைப் பொருள் குற்றச்சாட்டில் தூக்கிலடப் பட்டுள்ளனர்.
போதைப் பொருள் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்ட ஆண்கள் !
ஈரானின் பெண்கள் மற்றும் குடும்ப விவகாரங்க ளுக்கான உப ஜனாதிபதி ஷஹின் டோக்த் மொலாவேர்தி இத்தகவலை தெரிவித்துள்ளார்.

ஈரானின் கிழக்குப் பகுதியில் பாகிஸ்தான் எல்லையிலுள்ள சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் எனும் ஈரானிய மாகாண த்திலேயே இக்கிராமம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

சிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஒவ்வொரு ஆணும் தூக்கிலிடப் பட்டுள்ளனர். 

தற்போது அரசாங்கத்தின் உதவி இல்லா விட்டால், அவர்களின் பிள்ளைகள் போதைப் பொருள் கடத்தல் காரர்களா குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

தமது தந்தையின் மரணத்துக்கு பழிவாங்கு வதற்காக அல்லது தமது குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளுக்கு உதவுவதற்காக இவர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடபடக்கூடும் என உப ஜனாதிபதி ஷஹின் டோக்த் மொலா வேர்தி கூறியுள்ளார். 

எனினும், மேற்படி கிராமத்தின் ஆண்கள் எப்போது தூக்கிலிடப் பட்டார்கள், ஒரே தடவையில் தூக்கிலிடப் பட்டார்களா அல்லது ஒரு குறித்த காலப் பகுதியில் தூக்கிலிடப் பட்டார்களா என்பது தெரிய வில்லை. 

மரண தண்டனை வழங்குவதால் போதைப் பொருள் கடத்தல் குறைந்து விட வில்லை என்பதை ஈரானிய அதிகாரிகள் ஏற்று கொள்கின்றனர். 
போதைப் பொருள் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்ட ஆண்கள் !
ஆனாலும் அரசு இது போன்ற குற்றங்களுக்கு தொடர்ந்தும் தூக்குத் தண்டனை விதிக்கப் படுகிறது என ஈரானிய மனித உரிமைகள் அமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டோரில் 74 சதவீதமானோர் போதைப் பொருள் கடத்தலில் தொடர் புடையவர்கள் என மனித உரிமைகளுக்கான ஈரானிய பேரவை தெரிவித்துள்ளது.
Tags:
Privacy and cookie settings