1 மில்லியன் பிராங்க் கொள்ளை... சுவிஸ் !

சுவிட்சர்லாந்தில் உள்ள நகை கடை ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள் அங்குள்ள ஊழியர்களை துப்பாக்கியை காட்டி 
1 மில்லியன் பிராங்க் கொள்ளை... சுவிஸ் !
மிரட்டி 1 மில்லியன் பிராங்க் மதிப்பிலான நகைகளை அள்ளிச் சென்றுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் சூரிச் நகரில் பிரபலமான ஹாரி ஹோப்மன் ( Harry Hofmann ) என்ற நகைக்கடை உள்ளது. 

இந்த கடையில் விலை உயர்ந்த நகைகள், வைரக்கற்கல் என பல ரக நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நேற்று பிற்பகல் நேரத்தில் முகமூடி அணியாமல் நாகரீக உடுப்புகளுடன் 3 நபர்கள் அந்த நகைக்கடைக்குள் நுழைந்துள்ளனர்.

பின்னர், அவர்கள் திடீரென  தாங்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கிகளை எடுத்து அங்குள்ள ஊழியர்களை மிரட்டியுள்ளனர். 

அந்தக்கடை ஊழியர்கள் கொள்ளையர்களை எதிர்க்க முடியாமல் பயம் காரணமாக திணறியுள்ளனர்.

இதனால் கொள்ளையர்கள் ஊழியர்களிடம் எந்தவித எதிர்ப்பும் இல்லாததால் நகைக்கடையில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை மூட்டையாக கட்டிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். 
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், நகைக்கடையில் அதற்கான ஆதாரங்களை சேகரித்தனர்.

நகைக்கடையில் பொறுத்தியிருந்த கண்காணிப்பு கமெராக்களை ஆய்வு செய்த போது, கொள்ளையிட்ட நபர்களின் உருவம் கண்டறியப்பட்டது.
1 மில்லியன் பிராங்க் கொள்ளை... சுவிஸ் !
அந்நாட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும், பொலிசாருக்கு துப்பு கிடைக்கும் என்ற நோக்கத்தில் இந்த புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

நகைக்கடை உரிமையாளர்களிடம் நடத்திய விசாரணையில் திருட்டு பொருட்களின் ஒட்டு மொத்த மதிப்பு 1 மில்லியன் பிராங்க் வரை இருக்கும் என தெரிவித்துள்ளார். 

சூரிச் நகரில் நடந்த இந்த சம்பவம் அந்நகர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Privacy and cookie settings