பொங்கலுக்கு எத்தனை படங்கள்? | How many pictures Pongal?

தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை இரண்டே இரண்டு நாட்கள்தான் பட வெளியீட்டிற்கான முக்கியமான நாட்கள், ஒன்று பொங்கல், மற்றொன்று தீபாவளி. 
இந்த இரண்டு நாட்களிலும் படங்கள் வெளிவருவது சிறப்பான ஒன்றாகவே பல காலமாக அமைந்து வருகிறது. 

இந்த வருட தீபாவளிக்கு வெளியாகியுள்ள இரண்டு முக்கிய பெரிய படங்களைப் பொறுத்தவரையில் சிறப்பாகவே அமைந்துவிட்டது. வேதாளம், தூங்காவனம் ஆகிய இரண்டு படங்களும் வாங்கியவர்களைக் காப்பாற்றிவிடும் என்றே சொல்கிறார்கள். 

அடுத்த வெளியீட்டுப் போட்டி 2016ம் ஆண்டு பொங்கலுக்குத்தான் நடக்க உள்ளது. அந்தப் போட்டியில் இடம் பெற இப்போதே சில படங்கள் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளன.

பாலா இயக்கும் தாரை தப்பட்டை, சூர்யா நடிக்கும் 24, விஷால் நடிக்கும் கதகளி, சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மனை 2 ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி நேரத்தில் இதில் ஏதாவது மாற்றங்களும் ஏற்படலாம்.

அதற்கு முன்னதாக டிசம்பரில் மற்றுமொரு போட்டியும் காத்துக் கொண்டிருக்கிறது. தனுஷ் நடித்துள்ள தங்கமகன், உதயநிதியின் கெத்து, ஜீவாவின் திருநாள், சிம்புவின் இது நம்ம ஆளு, பாபி சிம்ஹாவின் கோ 2, ஆகிய படங்களும் வெளிவர உள்ளன.

இந்த நவம்பர் மாதத்திலேயே சத்யராஜ் நடித்துள்ள ஒருநாள் இரவில், பாண்டிராஜ் இயக்கியுள்ள பசங்க 2, ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள இஞ்சி இடுப்பழகி, அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள ஒருநாள் கூத்து ஆகிய படங்களும் வெளிவர உள்ளன.
Tags:
Privacy and cookie settings