தொகுதிப் பங்கீடு குறித்து ஓரிரு நாளில் பேச்சு இளங்கோவன் !

திமுகவுடன் ஓரிரு நாளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரி வித்துள்ளார்.


உடல்நலக் குறைவு காரண மாக கடந்த சில நாட்களாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த இளங்கோவன், நேற்று முன்தினம் வீடு திரும்பினார். இந்நிலையில், சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிரு பர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

சில நாள்களாக சளி தொல்லை யால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். தற்போது முழு உடல் நலத்துடன் இருக்கிறேன். என் மீது அக்கறை கொண்டு விசாரித்த காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி யினர், ஊடக நண்பர்களுக்கு நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளும் அதிமுகவை தோற்கடிக்க திமுக - காங்கிரஸ் கூட்டணியே போது மானது. தேமுதிக வந்தால் கூடுதல் பலம் சேர்க்கும் என விரும்பி அழைப்பு விடுத்தோம். 

விஜய காந்த் வரவில்லை என்பதால் விட்டு விட்டோம். அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக திமுக - காங் கிரஸ் கூட்டணிக்கு விஜயகாந்த் வர விரும்பினால், கூட்டணி கட்சிக ளுடன் பேசி முடிவெடுப்போம். 

தேமுதிகவுடன் மீண்டும் பேச்சு நடக் கிறதா என்பது போன்ற யூகங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி மிக வலுவாக உள்ளது. எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது.

தொகுதிப் பங்கீடு பேச்சு நடத்துவதற்கான குழுவை இன்று அல்லது நாளை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கும். ஓரிரு நாளில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும்.

அதிமுக மூத்த அமைச்சர்கள் பற்றி கடந்த சில வாரங்களாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. அமைச்சர்கள் சுதந்திரமாக இருக்கி றார்களா அல்லது யாருடைய கட்டுப்பாட்டிலும் இருக்கிறார்களா? 

அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உண்மையெனில் எதற்காக என்பது குறித்தெல்லாம் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளிக்க வேண்டும்.

மக்கள் நலக் கூட்டணியால் 2 சதவீத வாக்குகளைக்கூட பெறமுடி யாது. எனவே, அந்தக் கூட்டணியை உடைக்க திமுக சதி செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியிருப்பது சிறந்த நகைச்சுவை. இவ்வாறு இளங் கோவன் கூறினார்.
Tags:
Privacy and cookie settings