நடிகர்கள் தெளித்த சர்ச்சை வார்த்தைகள் !

வறுத்த கடலையக் கொட்டினா அள்ளிடலாம், வார்த்தையக் கொட்டினா அள்ள முடியுமா, அப்படி அள்ளமுடியாத, 2015 ஆம் ஆண்டு பஞ்சாயத்துக் குள்ளான சினிமா பிரமுகர்களின் வார்த்தைகள் இதோ... 
நடிகர்கள் தெளித்த சர்ச்சை வார்த்தைகள் !
எவனா இருந்தாலும் வெட்டுவேன்: 

ஆம்பள இசை வெளியீட்டு விழாவில் விஷால் சொன்னதாக சொல்லி பத்த வச்சிட்டியே பரட்ட ஆர்யா மொமெண்ட். என்னை அறிந்தால், ஐ ஆகிய பெரிய படங்கள் வருகையில் 

உன் படத்தை வெளியிடுகிறாயே என ஆர்யா கேட்டதற்கு விஷால், எவனா இருந்தாலும் வெட்டுவேன் என சொல்லியதாகச் சொல்லி அஜித் ரசிகர்களைக் கொஞ்சம் சீண்டி விட்டு நெட்டில் ரவுசு கட்டினார்கள். 

பிறகு அதெல்லாம் இல்லீங்க நான் அப்படிச் சொல்லவே இல்லை என விஷால் இன்னொரு நிகழ்ச்சியில் அப்ரூவர் ஆனது வேறு கதை.

பாயும் புலி, பாகுபலி எனக் கேட்கிறது: 

பாயும் புலி படத்தின் இசை வெளியீட்டில் பாயும்புலி எனச் சொல்லும் போதெல்லாம் என் காதில் பாகுபலி என விழுகிறது என்று லிங்குசாமி சொன்னதுதான் தாமதம் நெட்டிசன்கள் வெச்சு செஞ்சாங்க. 

இது அட்டகாசமான ‘புலி’: 

புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர் மூச்சு விடாமல் முப்பது நிமிடங்கள் பேசிய புலி மந்திரம் நம் வீட்டில் மூணு வயது சுட்டிகளுக்கும் மனப்பாடம். 
நடிகர்கள் தெளித்த சர்ச்சை வார்த்தைகள் !
இது அதிசய புலி, அட்டகாசமான புலி, இது புலி... ’நாய்’ : சினிமாவுலயும் அரசியல் செஞ்சு , எதிர்கட்சிக்காரரான விஷாலைப் பார்த்து ராதாரவி நாய் என ஒற்றை வார்த்தையைச் சொல்லி பஞ்சாயத்தானதை நாம் மறக்க முடியுமா? 

நான் போன் பண்றேன் சிரிக்கிறார்ங்க: 

நடிகர் சங்கத் தேர்தல் பிரச்சாரத்தில் சிம்பு பேசிய டயலாக், நான் விஷாலுக்கு போன் பண்றேன் சிரிக்கிறாருங்க. என சொல்ல அடடே ட்ரெண்டானது. 

நான் 16 வயசுலயே நடிக்க வந்தவன்: 

அதே மேடையில் சிம்பு பேசிய டயலாக், நான் 16 வயசுலயே நடிக்க வந்தவன், இன்னிக்கு வந்த உனக்கென்ன தெரியும் நடிகர் சங்கம் பத்தி என காரசாரமாக காய்ச்சி ஊற்றிய சிம்பு தான் மீண்டும் வைரல்..

தூக்கி அடிச்சிருவேன்: 

கேப்டன் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து எப்போப் பார்த்தாலும் போற பக்கமெல்லாம் வந்து எக்குத் தப்பா கேள்வி கேட்டுகிட்டு, தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ என கூற, ஐயோ பத்திக்கிச்சு. 

சகிப்புத்தன்மை: 

அமீர்கான் இந்தியாவில் மதச் சகிப்புத்தன்மை இல்லை அதனால் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை எனக்கூறி சமூக வலைதளங்களின் வாய்க்கு அவல் கொடுத்தார்.
நடிகர்கள் தெளித்த சர்ச்சை வார்த்தைகள் !
அறிவிருக்கா: 

இந்த வருடத்தின் டாப் ட்ரெண்ட் சர்ச்சை வார்த்தைகளில் முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தை. 

இளையராஜா டிவி நிருபரைப் பார்த்து அறிவிருக்கா, அறிவிருக்குங்கறத எந்த அறிவ வெச்சு நீ சொல்ற எனக் கேட்டு மீடியாக்களை கொந்தளிக்க வைத்தார்.

தூ: 

யார் என்ன ட்ரென்ட் உருவாக்கினாலும் கேப்டன் ட்ரெண்டே தனி தான். பத்திரிகையாளர்களைப் பார்த்து தூ என சொல்லிவிட்டு 2015ம் ஆண்டை இனிதே முடித்து வைத்தார். 

இவர்கள் சொன்ன சில வார்த்தைகளைத் தவிர்த்து மற்ற அனைத்துமே சமூக அளவில் கொஞ்சம் சர்ச்சைகளை உருவாக்கக் கூடியவை தான். 

2016ஆம் ஆண்டிலாவது ரோல் மாடல்களாக இருக்க வேண்டிய இவர்கள் தங்கள் இருக்கும் அந்தஸ்து மற்றும் பொறுப்புகள் உணர்ந்து வார்த்தைகளை பக்குவமாக கையாளுவார்கள் என நம்புவோம்.
Tags:
Privacy and cookie settings