கருப்பு எம்.ஜி.ஆர் நம்ம எம்.ஜி.ஆரை மதிக்கும் லட்சணமா இது !

ஆசை ஆசையாக ஜானகி எம்.ஜி.ஆர் கொடுத்த, மறைந்த எம்.ஜி.ஆர். பயன்படுத்தி வந்த பிரசார வேனை வாங்கிய கையோடு அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டார் விஜயகாந்த். அந்த வேன் தற்போது காயலான் கடைக்குப் போடும் அளவுக்கு மோசமாகிக் கிடக்கிறது. 
இது எம்.ஜி.ஆரின் பக்தர்களை மனம் வெதும்பச் செய்துள்ளது. முறையாக இந்த வேனை விஜயகாந்த் பராமரித்து வர வேண்டும். அதுதான் எம்.ஜி.ஆருக்கு அவர் செலுத்தும் மரியாதை. 

முடியலையா, பேசாமல் அரசிடம் ஒப்படைத்து விட வேண்டும். இப்படியெல்லாம் பராமரிக்காமல் வைத்து எம்.ஜி.ஆரைக் கேவலப்படுத்தக் கூடாது என்று பலரும் கூறி வருகின்றனர். 

அந்த வேன் தற்போது முறையான பராமரிப்பு இல்லாமல் உடைந்து சிதையும் நிலைக்குப் போய் விட்டதாம். பிரித்து எடைக்கு எடைப் போடும் அளவுக்கு, காயலான் கடைக்கு அனுப்பும் அளவுக்கு மோசமாக உள்ளதாம்.

நீல நிற வேன் அது. எம்.ஜி.ஆர். இந்த வேனைத்தான் தனது தேர்தல் பிரசாரத்தின்போது பயன்படுத்தி வந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் அவரது ராமராவரம் தோட்டத்தில் அனாதையாக நின்று கொண்டிருந்தது இந்த வேன்.

இந்த நிலையில் கடந்த 2005ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரனிடம் இந்த வேனைக் கேட்டுப் பெற்றார் விஜயகாந்த். ஆர்.எம். வீரப்பன் உள்ளிட்ட பலரும் கேட்டும் கூட இந்த வேனைத் தராதவர் ஜானகி. ஆனால் விஜயகாந்த் கேட்டதும் கொடுத்தார்.

இந்த வேனில்தான் தனது கட்சியியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார் விஜயகாந்த். இது எம்.ஜி,.ஆருடைய வேன் என்றும் பெருமையாக கூறி வந்தார்.

விருத்தாச்சலம் தொகுதியில் தான் முதல் முறையாக போட்டியிட்டபோது இதில் தான் பிரசாரம் செய்தார். பின்னர் இந்த வேனை கொண்டு வந்து தனது சென்னை வீட்டில் வைத்து விட்டார் 

பின்னர் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்குக் கொண்டு வந்து வைக்கப்பட்டது. அத்தோடு சரியாம், அதன் பிறகு அந்த வேனை துடைத்து சரியாக பராமரிக்காமல் விட்டு விட்டார்கள்.

முறையான பராமரிப்பு இல்லாமல் போனதால் அந்த வேன் துருப்பிடித்து இற்றுப் போய் விட்டதாம். பார்ட் பார்ட்டாக பிரித்துத்தான் எடுத்துச் செல்ல முடியும் என்ற அளவுக்கு மோசமாக உள்ளதாம் வண்டியின் நிலை.

எம்.ஜி.ஆர். பயன்படுத்தி வந்த வேன் இந்த அளவுக்கு மோசமான நிலையில் இருப்பதைப் பார்த்து எம்.ஜி.ஆர். பக்தர்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்களாம். ஒன்று முறையாகப் பராமரிக்க வேண்டும். 
அல்லது அரசிடம் கொடுத்து விட வேண்டும் என்று அவர்கள் விஜயகாந்த்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். விஜயகாந்த்திடம் இன்னொரு காரும் இருந்தது. அது அவர் முதல் முறையாக வாங்கிய அம்பாசடர் கார். 

அதன் எண் 2 ஆகும். அந்தக் காரை ரொம்பப் பத்திரமாக பாதுகாப்பாக வைத்திருந்தார் விஜயகாந்த். அதையாவது இன்னும் பத்திரமாக வைத்துள்ளாரா என்று தெரியவில்லை.
Tags:
Privacy and cookie settings