முதலுதவி பெட்டியில் இருக்க வேண்டிய பொருள் ?

முதலுதவி என்பது திடீரென காயப்பட்ட அல்லது நோய் வாய்ப்பட்ட ஒருவருக்கு உரிய உதவி கிடைக்கும் வரை சுற்றுச் சூழலில் கிடைத்த வசதிகளைப் பயன்படுத்தி 



அதற்கென பரிந்துறை செய்யப்பட்ட முறையில் உயிரைக் காப்பதற்கு அல்லது தக்கவைத்துக் கொள்வதற்கு வழங்கப்படும் ஒரு அவசர உதவியே முதலுதவி. 

1. நோய் கிருமிகளை அழிக்கும் மருந்து மற்றும் காயத்தை ஆற்றுவதற் கான ஆயில்மெண்ட் இருக்க வேண்டும். 

2. முக்கோண வடிவில் சுற்றுவதற்கு பேண்டேஜ் இருக்க வேண்டும். 

3. கட்டு துணி மற்றும் பேண்டேஜ் இருக்க வேண்டும். 

4. காயம்பட்ட இடத்தை சுத்தம் செய்ய துணி இருக்க வேண்டும்.

5. முறிந்த எலும்பை இணைப்பதற்காக வைத்து கட்டப்படும் சிம்பு அல்லது கட்டை இருக்க வேண்டும். 

6. துணிகளை வெட்ட மற்றும் காயம்பட்ட இடத்தை சுற்றி இருக்கும் முடிகளை வெட்ட நல்ல கத்திரி இருக்க வேண்டும். 



7. தீக்காயங்கள் ஏற்பட்ட இடங்களில் போடுவதற்கான கிரீம் இருக்க வேண்டும். 

8. ஒட்டும் தன்மையுள்ள டேப் ரோல்கள் இருக்க வேண்டும். 

 9. தெர்மோ மீட்டர் இருக்க வேண்டும். 

10. காகிதம் மற்றும் பென்சில் இருக்க வேண்டும். 

இதுவே, முதலுதவி பெட்டியில் இருக்க வேண்டிய முக்கியமான மற்றும் எப்பொழுதும் தேவையான பொருட்களாகும்.
Tags:
Privacy and cookie settings