அரேபியர்கள் உண்ணும் குப்புஸ் ரொட்டியுடன் வளைகுடா வாழ்க்கை !

குப்புஸ் என்பது அரபு நாட்டில் வசிக்கும் அரேபியர்கள் உண்ணும் ரொட்டி! இது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக் கூடியது அதனாலேயே இது அங்கு வாழும் நம் நாட்டவர்களின் சிக்கனத்திற்கான ரொட்டியும் கூட!
குப்புஸ் ரொட்டியுடன் வளைகுடா வாழ்க்கை !
இதுதான் அரேபியர்களின் பாரம்பரிய ரொட்டி, பாகிஸ்தானில் தொடங்கி அப்படி அரபியே பாலைவனம் தொட்டுக் கிரேக்கம் வரை இவ்வகையான ரொட்டியே முதன்மை உணவு.

நான்ரொட்டி, குல்ச்சா ரொட்டி போன்ற வகைகளை நாம் அறிந்திருப்போம். அது போலத் தான் இதுவும். இது Flate Bread வகையைச் சார்ந்தது எனச் சொல்லலாம்.

இது நம்வூர் சப்பாத்தி போலச் சட்டியில் சுடப்படுதில்லை, அடுமனையில் வைத்துப் பேக் செய்வது போலச் செய்கிறார்கள்.
சுவை என்று எதுவும் விஷேசமாக இல்லை ஆனாலும் பசியைப் போக்கும், சத்தானதாகவும் இருக்கும்.

கடும் வெயிலிலும் காற்றிலும் உழைக்கும் மக்களின் விருப்ப உணவு, ஏழை பணக்காரன் என அனைவரின் உணவிலும் முதலிடம் பிடிக்கும்.

குப்புஸை மட்டும் தனியாகவும் சாப்பிடலாம், தேநீரில் தொட்டுச் சாப்பிடலாம், ஹம்மூஸ் எனப்படும் கொண்டை கடலைத் துவையல் வைத்துச் சாப்பிடலாம். 
குப்புஸ் ரொட்டியுடன் வளைகுடா வாழ்க்கை !
வெறும் ஆலிவ் எண்ணையைத் தொட்டும் சாப்பிடலாம். வெறும் வெங்காயம் ரெண்டு மிளகாய் வைத்து சாப்பிடுபவர்களும் உண்டு – அப்படியாவது பசியை போக்கனும் இல்லியா.

தமிழர்கள் இதை வைத்து உப்புமா செய்கிறார்கள், சில்லி குப்புஸ் செய்கிறார்கள். 

எப்படி எல்லாமோ அதை நம்மூர் சுவைக்கு ஏற்ப மாற்ற முயற்சி செய்கிறார்கள் ஆனாலும் அது நம்மூர் மசாலாக்களோடு எடுபடுவதில்லை எனச் சொல்லுவேன்.

குப்புஸை அரேபியர்கள் சாப்பிடுவதை கண்டிப்பாக இங்கே சொல்லியாக வேண்டும், இரு கைகளாலும் குப்புஸை எடுப்பார்கள், அதை இரண்டாக கிழித்து இரு துண்டாக்குவார்கள், 
அந்த இரு தூண்டுகளிலிருந்து ஒரு பகுதியை மட்டும் கைகளில் வைத்துக் கொண்டு சிறிது சிறிதாக அதை பிய்த்து 

கறியை அதை வைத்தே பிய்த்து கறியை அதோடு லாவகமாக குப்புஸூக்குள் சுற்றி வாய்க்குள் செலுத்துவார்கள்.

இப்படியாக குப்புஸ் பிய்த்து சாப்பிடும் முறை கலாச்சாரம் சார்ந்ததாகவும் இருக்கிறது. 

அரேபிய கலாச்சாரங்களில் இப்படியாக இரண்டாக பிய்த்து பிரிப்பது கொடுப்பது உணவை பகிர்ந்து கொள்ளுதை நினைவுப் படுத்துவதாகவும் இருக்கிறது.
குப்புஸ் ரொட்டியுடன் வளைகுடா வாழ்க்கை !
குப்புஸூக்குள் சிறிது வெள்ளரிக்காய், லெட்ட்யூஸ் இலை ஹம்முஸ் வைத்துச் சாப்பிட்டால் வெஜிடபுள் சாண்ட்விஜ், அதற்குள் ஃபெலாஃபெல் எனப்படும் வடையை வைத்தால் பெலாபெல் சாண்ட்விஜ், 

அதற்க்குள் சிக்கன் வைத்தால் சவர்மா, என இந்தக் குப்புஸீக்குள் எதையாவது வைத்து அதன் சுவையை எடுத்துச் சென்று கொண்டிருப்பார்கள்.
ஒரு குப்புஸ் சாப்பிட்டால் போதும் கம்முன்னு வயிறு இருக்கும். அற்புதமான அரேபிய உணவு.
Tags: