பிரபு சாலமன், தனுஷ் இணையும் தொடரி !

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படத்திற்கு 'தொடரி' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிக்க புதிய படமொன்று தொடங்கப்பட்டது.
பிரபு சாலமன், தனுஷ் இணையும் தொடரி !
முழுக்க ரயில் பின்னணியில் இப்படத்தின் கதை மற்றும் திரைக் கதையை அமைத்திருக்கிறார் பிரபு சாலமன். 

இப்படத்தில் தனுஷ் ரயில்வே உணவுக் கூடத்தில் பணியாற்று பவராகவும், அவருடைய காதலியாக கீர்த்தி சுரேஷூம் நடித்திருக்கிறார்கள்.

தம்பி ராமையா, கருணாகரன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டவர்களும் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். 

இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கிறது. யுகபாரதி அனைத்து பாடல்களையும் எழுத இமான் இசையமைத் திருக்கிறார்.

படப்பிடிப்பு முடித்து இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக இப்படத்திற்கு பொருத்தமான பெயர் குறித்த ஆலோசனை நடைபெற்று வந்தது. 
'ரயில்'. 'மிரட்டு' ஆகிய தலைப்புகள் பரிசீலனையில் இருந்ததாக செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில் இப்படத்திற்கு 'தொடரி' என்று தலைப்பிடப்படு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் இணையத்தில் வெளியிடப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings