ஒரு கள்ளக்காதல்... சில நிர்வாணப் படங்கள்... குற்றச்சாட்டு !

துபாயில் திருமணமாகாத ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு உடல் ரீதியாக உறவு வைத்துக் கொண்டதாகவும், 
ஒரு கள்ளக்காதல்... சில நிர்வாணப் படங்கள்... குற்றச்சாட்டு !
அந்த நபருக்கு நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பியதாகவும் ஒரு திருமணமான பெண் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அதேபோல, அந்தப் பெண்ணை தூண்டி விட்டதாக அந்த ஆண் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அப்பெண்ணுக்கு வயது 29.. ஆணுக்கு வயது 28. 

இவரும் துபாயில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்தில் வைத்து அறிமுகமாகியுள்ளனர். தனது குழந்தையை பள்ளிக்கு அழைத்து வந்தபோது இந்தப் பழக்கம் அப்பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது. 

அதன் பிறகு இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கியுள்ளனர். அந்த ஆணுக்கு திருமணமாகவில்லை. வேலையும் எதுவும் இல்லாதவராம்.

காமரோஸ் தீவு

அந்த ஆண் காமரோஸ் தீவைச் சேர்ந்தவர். துபாயில் உள்ள ஒரு பள்ளிக்கு தனது குழந்தையை கொண்டு வந்து விட வந்த பெண்ணுடன் இவருக்கு அறிமுகம் ஏற்பட்டது.

போன் கொடுத்து தொடர்பு
அப்போது அந்தப் பெண்ணிடம் ஒரு செல்போனைக் கொடுத்து இதிலிருந்து தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். 

அவரும் அதை ஏற்றார். இருவருக்கும் இடையே தொலைபேசித் தொடர்பு தொடங்கியது.

3 முறை செக்ஸ்

அதன் பின்னர் இருவரும் 3 முறை செக்ஸ் உறவும் வைத்துக் கொண்டனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சினைகள் வெடித்தன.

திருமணத்திற்கு வற்புறுத்தியதால்

உனது கணவரை விட்டுப் பிரிந்து வா. நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அந்த நபர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதை அப்பெண் ஏற்கவில்லை.

வேலை வெட்டி இல்லாத உன்னுடன் வந்து நான் என்ன செய்ய என்று கூறியுள்ளார். பிள்ளைகளைப் பிரிந்து வர முடியாது என்றும் கூறி விட்டார்.

பிரிந்தனர்

இதையடுத்து இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர் அந்த நபர் அப்பெண்ணை மிரட்ட ஆரம்பித்துள்ளார். இதனால் அப்பெண் அதிர்ச்சி அடைந்தார்.
ஒரு கள்ளக்காதல்... சில நிர்வாணப் படங்கள்... குற்றச்சாட்டு !
நிர்வாணப் படங்கள்

இருவரும் நெருக்கமாக பழகி வந்தபோது அப்பெண் அந்த நபருக்கு நிர்வாணப் படங்கள் பலவற்றை கீக் எனப்படும் சமூக வலைதளம் மூலமாக அனுப்பியிருந்தார். 

அதை உனது கணவரிடம் காட்டி விடுவேன் என்று அந்த ஆண் நெருக்க ஆரம்பித்தார்.

போலீஸில் புகார்

இதனால் பயந்து போன அப்பெண் உடனடியாக போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 

அதன் இறுதியில் தற்போது அப்பெண் மீது 2 பிரிவுகளிலும், அந்த நபர் மீது ஒரு பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருமணம் செய்யாமல் செக்ஸ்
அப்பெண் மீது திருமணம் செய்யாமல் இன்னொரு ஆணுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டது, நிர்வாணப் படங்களை அந்த நபருக்கு அனுப்பியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அந்த நபர் மீது அப்பெண்ணை தவறு செய்யத் தூண்டிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இருவர் மீதான வழக்கும் தற்போது கோர்ட்டில் நடந்து வருகிறதாம்.
Tags:
Privacy and cookie settings