அரசுப் பள்ளிகள் அருகே போதைப்பொருள் விற்பனை | New type of drug, and the intensity of public schools near Chennai !

சமீபகால மாக சென்னை நகரின் பல்வேறு பகுதி களிலும் உள்ள அரசுப் பள்ளி கள் அருகே குறிப்பிட்ட ஒரு வகை போதைப் பொருள் படு ஜோராக விற்ப னையாகி வருகிறது.
12 ரூபாய்க்கு கிடைக்கும் புகையி லையைக் கொண்டு தயாரிக்கப் பட்டுள்ள அந்தப் பொருளின் பெயர் 'கூல் லிப்' (‘Cool Lip’)
சில வாரங்க ளுக்கு முன்னர் சென்னை மேற்கு புறநகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி அருகே மாணவர் ஒருவர் இயல்பு நிலையில் இல்லாமல் சுற்றித் திரிந்ததை ஆசிரியர் ஒருவர் பார்த் ருக்கிறார்.

மாணவர் அருகே சென்று பார்த்த போது, அந்த மாணவர் வாயில் எதையும் மென்று கொண்டி ருந்தது தெரிய வந்தது. விசாரித்தபோது அது கூல் லிப் என்ற போதை வஸ்து எனத் தெரியவ ந்துள்ளது.

இந்த பொருள் குறைந்த விலையில் கிடை ப்பதால் மாணவர்கள் எளிதாக இரையாகக் கூடும் என ஆசிரியர்கள் பெற்றோர்கள் கவலை தெரிவி த்துள்ளனர்.

இந்தப் பொருளை தங்கள் நாக்குக்கு அடியில் வைத்து மாணவர்கள் சுவைக் கின்றனர். வகுப்ப றையிலும் கூட இதை சில மாண வர்கள் பயன் படுத்துவதாக ஆசிரியர்கள் வருத்தம் தெரிவிக் கின்றனர்.
பள்ளிகளின் அருகில் இருக்கும் பெட்டிக் கடைக்கார ர்களே இந்தப் பொருளை மாணவ ர்களுக்கு அறிமுகப் படுத்தி பழக்கு கின்றனர் என ஆசிரியர்கள் சிலர் குற்றஞ் சாட்டு கின்றனர்.

சைதாப் பேட்டை அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும் போது, "எங்கள் பள்ளி அருகே இத்தகைய பொருட்களை மாணவ ர்களுக்கு விற்பனை செய்வது பள்ளியி லிருந்து பாதியில் நின்ற மாண வர்களே. அவர்களை எதிர்த்து கேள்வி கேட்டால் எங்களை தாக்கு வார்கள்" என்றார்.

அர்த்தநாரி என்ற முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறும் போது, "மாணவ ர்கள் இத்தகைய போதைப் பொருட்களை வகுப்பறையில் பயன்ப டுத்து வதை நாங்கள் நேராகவே பார்த்திரு க்கிறோம். ஆனால், அவர்களை திருத்துவது மிக மிக கடினம்" என்றார்.

இது குறித்து மாநகராட்சி உயராதி காரி ஒருவரிடம் கேட்ட போது, "இது முழுக்க முழுக்க பள்ளி தலைமை ஆசிரியரின் பொறுப்பின் கீழ் வருகிறது. அவர்தான் பள்ளியின் அருகா மையில் இத்தகைய பொருட்கள் விற்கப்படு வதை தடுக்க அவர்களே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவைப் பட்டால் போலீஸில் புகார் அளித்து சம்பந்த ப்பட்ட பெட்டி கடைகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

போதைப் பழக்கத் திலிருந்து விடுபடுவ தற்காக ஏற்படுத்தப் பட்டுள்ள அரசின் 104 இலவச தொலைபேசி அழைப்பு மையத்துக்கு ஒவ்வொரு மாதமும் 80 அழைப்புகள் உதவி கோரி வருகின்றன.

அவற்றில் குறைந்தது 10-லிருந்து 12 அழைப்புகள் சிறாரிட மிருந்தே வருகிறது என்கிறது ஒரு புள்ளி விவரம். இந்நிலை யில், சென்னை அரசுப் பள்ளிகள் அருகே

இத்தகைய போதை வஸ்துகள் விற்பனை செய்யப் படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க ப்படும் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings